Friday, March 16, 2007

அறிவே என்ன செய்வாய் ?

அதிகாலை விழித்து, இருள் அழித்து, காலை கடன் கழித்து கம்ப்யூட்டர் ஆன் செய்தால் இன்டெர்னெட் வேலை செய்யவில்லை. இதயத்துடிப்பு ஒருமுறை ஸ்கிப்பாகி இயங்கியது.

சனிக்கிழமைகளில் BSNLஐ மட்டும் நம்பி வாழும் ஜீவன்களில் நானும் ஒன்று. "வெச்சாங்கடா ஆப்பு ! " என்று மனதில் புலம்பிக்கொண்டே பல் துலக்கினேன். என்னதான் பல்லும் பவிஷுமாக இருந்தாலும், என் அவ்யுக்தா (என் கணிணியின் பெயர்) ஜீவன் இல்லாமல் காட்சி அளித்தது. இதை எழுத ஆரம்பிப்பதற்கு ஓரிரண்டு நிமிடம் முன்னர்தான், "ஓகே சார் ! இப்பொ ட்ரை செஞ்சு பாருங்க !" என்றார் ஓர் பெண்மணி. மேட்ரிக்ஸ் பட முத்தக்காட்சியில் உயிர் பெறுவாரே நியோ, அதுபோல் பளீரென்று கனெக்ட் ஆனது. அப்பாடா !

சமீபத்தில் எனக்கு வந்த உருப்படியில்லாத ஃபார்வார்ட்களில் ஒன்று நினைவுக்கு வந்தது. "ஒரு நாள் கணிணி இல்லாமல் உஙகளால் குப்பை கொட்ட முடியுமா ?" என்று கேட்டது. அந்த கேள்விக்கு காலையில் நான் பதில் தேடிக்கொண்டேன்.

என்னால் முடியாது.

உடனே "அடிக்ஷன் தவறு !" என்று விரல் நீட்டாதீர்கள். "சாராயம் போதை தரும்.. தாய்ப்பாலும் போதை தரும்" என்று கமல் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. சில விஷயங்களை பகுத்தறிவு கண்ணாடி போட்டுப்பார்க்காமல், குருட்டுத்தனமாக நம்புவது எனது இயல்பு. It makes sense, when Logic is not applied everywhere.

சரி அதையெல்லாம் விடுங்கள். பிற்பாடு பேசலாம். இப்பொழுது நான் சற்றுமுன் யோசித்த விஷயத்தை அவிழ்த்துவிடுகிறேன்.

நாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் ?

லவ்-பர்ட்ஸ் படத்தில் நக்மா தோன்றும் பாடல் இது. (பிரபுதேவாவும் இருப்பாராமே ?. நான் பார்த்ததே இல்லை ;) இந்தப்பாடலை உல்டா செய்து உலகப்புகழ் அடையலாம் என்றெல்லாம் கற்பனை செய்தேன். ஆனால், என் வறண்ட தமிழறிவுக்கு எட்டவில்லை. உங்களால் முடிந்தால் கற்பனை செய்து பின்னூட்டி விடுங்கள்.

என்னால் முடிந்தது...

நாளை இன்டெர்நெட் இல்லையென்றானால் அறிவே என்ன செய்வாய் ?
அவுட்லுக்கில் தோன்றி
ஜிமெயிலை இயக்கி
சின்க்ரனைஸ் பட்டனை தட்டிவிடுவேன்...

சிவாஜி படதின் MP3
எங்கேயாச்சும் கிடைக்குமா
என்று ஒரு முறை லுக்கு விடுவேன்..

இரண்டு வருடங்களாய் யாஹூவில் காதலித்தவளின்
முகவரி கேட்டு ஈமெயில் அனுப்புவேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ டைரெக்ட் போர்ட் ஃபோலியோவை பார்த்து
கடைசி முறையாக பெருமூச்சு விடுவேன்...

ஒர்குட்டில் கிடைத்த பழைய நண்பர்களை எல்லாம்
ஸ்க்ராப் செய்து ஆரத்தழுவி விடை பெறுவேன்..

யாரும் பார்க்காத ப்ளாக் சைட்டில்
போய் வருகிறேன் என்று மொக்கை போஸ்ட் போடுவேன்....

...........
போதும்.. உங்களுக்கு என்ன தோனுதுன்னு பார்ப்போம் !

1 comment:

Shree said...

Dei... Naan mostly ellam post layum comments podareneda..... :)