Tuesday, April 10, 2007

த்ரில்லிங்காக மெஸெஜ் அனுப்புவோர் சங்கம

இமெயில் வாசிக்கும் ஜாதியில் பல உட்பிரிவுகள் உண்டு. அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை "கன்வேயர் பெல்ட்" மற்றும் "டெட் என்டர்ஸ்".

கன்வேயர் பெல்ட் ஜாதி மக்கள், எந்த இமெயில் வந்தாலும் இந்தப்பக்கம் ஒரு இருபது இத்துப்போன இமெயில் ஐடிக்களுக்கு ஃபார்வர்ட் செய்வர். "அபூர்வமான பிள்ளையார் படம். முப்பது பேருக்கு சாயங்காலத்துக்கு முன் அனுப்பவில்லை என்றால் தும்பிக்கை முளைக்கும்" என்று சில. "வாழ்க்கை என்பது.." என ஆரம்பித்து அறுக்கும் சில பவர்பாயின்ட் அன்பளிப்புக்கள் (!).

சில சமயம் பழக்க தோஷத்தில் உபயக்ஷேமம் விசாரித்து வரும் பெர்சனல் லெட்டர்களையும் ஃபார்வர்ட் செய்து பிறகு அதற்கு பிரதி உபத்திரவமாய் மற்றொரு "Ignore this please" அனுப்புவர். ஹைதர் அலி காலத்து ஆறு எம்.பி கொள்ளளவு பெற்ற இமெயில் முகவரிகள் இந்த ஜாதி மக்களின் இம்சை தாளாமல் வீங்கி வெடிக்கும். காலை பார்த்துவிட்டு மதியம் பார்த்தால் இன்பாக்ஸில் இருபது முப்பது இமெய்ல் உட்கார்ந்திருக்கும். பைசா ப்ரயோஜனப்படாத இமெயில்கள் பதினைந்தாவது இருக்கும்.

இப்படி இந்த ஜாதி இருக்க.. இதற்கு நேர் நேர் எதிரெச்சமாக இருக்கும் ஜாதி தான் "டெட் என்டர்ஸ்". நான் கிட்டத்தட்ட இந்த ஜாதியின் சங்கத்தலைவராக இருக்கக் கூடும். "முட்டுச்சந்து" என்று கூட சொல்லலாம்.

இந்த நபருக்கு வரும் ஒரு இமெயிலும் ஃபார்வர்ட் என்ற பெயரில் வெளியே செல்லாது. வேலைக்கு நடுவில் தனக்கு வந்துள்ள கோடானு கோடி ஃபார்வர்டுகளை ப்ரதான மந்திரி பொதுமக்கள் மனுக்களை அலட்சியமாக நோட்டம் விடுவது போல பார்த்துவிட்டு டிலீட் செய்வார். வேலை மெனக்கெட்டு அதை அவருக்கு அனுப்பியவருக்கு ஒரு அக்னாலெட்ஜ்மென்டோ ரிப்ளையோ கிடைக்காது.

ஃபார்வர்ட் அனுப்ப மிகத்த்குதியான லெட்டர்களையும் இவர்களைத்தாண்டி அனுப்புவது இல்லை.

எஸ். எம். எஸ் தொழில் நுட்பத்திலும் இவ்வாறு ஜாதி பேதமை பேசலாம். சதா சர்வ காலமும் இஸ்க்கான் பக்தர் பைக்குள் கையை விட்டு ஜபம் செய்வது போலே.. கட்டைவிரலை கீபேடில் தட்டிய வண்ணமாகவே பலரை சென்னையில் பார்க்கலாம். சில டைப்பிஸ்ட்டுக்களை விட வேகமாக அடிப்பார்கள் என்பது எனது ஊகம். இவர்கள் பக்கம் பக்கமாக அனுப்பும் செய்திகளால் "Short Messaging Service" என்ற பெயரையே மாற்றப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

இதிலும் நான் "டெட் என்டர்" ஜாதி தான். ஆனால், இன்று எனக்கு வந்த ஒரு எஸ். எம். எஸ் என்னை எல்லாருக்கும் அதை அனுப்பச் செய்தது.

அது தான் இது.

கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்த ஒரு கொடுமையான சம்பவம்.
நாலாம் தேதி காலை சரியாக எட்டு மணி.
சுமதி என்ற அந்த அப்பாவிச் சிறுமி, அவளது சொந்த அப்பா மற்றும் வினாயகம் என்ற ஆட்டோ டிரைவரால் வீட்டைல் இருந்து கதற கதற இழுத்துச் சென்று


..
..
..
..
..
..
..
..

எல். கே. ஜி யில் சேர்க்கப்பட்டாள்.
-பை த்ரில்லிங்காக மெஸெஜ் அனுப்புவோர் சங்கம்.

நிஜம்மாகவே சிலர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.
ஆனாலும் எல்லோருக்கும் அனுப்ப பொறுமை இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் அனுப்பிவிட்டு ப்ளாகில் போட்டுவிடலாம் என்று விட்டு விட்டேன்.

ஆனால் ஒன்று. யாராவது "Chain eMails"ன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டு பிடித்தால் போதும். எந்த வருங்கால சந்ததிக்கும் எனர்ஜி ப்ரச்சனையே வராது.

6 comments:

Vicky said...

:)

நான் 29 நாளைக்கு டெட் என்டர்தான். monthly account ஆன 100 SMS Free ஐ காலி பண்ண மட்டும் மாசத்துல ஒரு நாளைக்கு கைல கிடைச்ச மொக்கை மெசஜ்ஜையும் 100 பேருக்கு forward பண்ற கன்வெயர் பெல்ட்டா மாறிடுவேன் ;) .

narayanan said...

நான் ரென்டும்கெட்டான் பேர்வழி. ரொம்ப நல்லா இருந்தா நெருங்கிய நன்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்வது உன்டு. மற்றபடி மித்பஸ்டர்ஸ் கூட்டத்தை சேர்ந்தவன் நான். அது தவிர இந்தியா வர்ல்ட் கப் வெல்லும்னு டுபுக்குதனமா ஃபார்வர்ட் அனுப்பினா சுத்த்மான ஆங்கிலத்திலோ, தமிழிலோ பொன்மொழிகள் பறக்கும் :D

மொபைல் கிபோர்டில் டைப் செய்யும் அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. பேச வேண்டுமென்றால் கால் செய்து பேசிவிடுவேன்.

Harish said...

Ctrl C Ctrl V of Narayanan :D

Keerthi said...

vicky, oh! neengal Kalappu thirumanam pola ! :)

Narayanan, send me a list of Tamil "Pon Mozhigal" please. Im in need of them. Badly !

harish, Ctrl+C Ctrl+V reply to Narayanan.

Anonymous said...

enne athisayam, thaangal pathil kooda kodukireergale

Chakra said...

Every mnth I have 500 SMS msgs free.. in the last 1 yr, of the 6000 (500 * 12), I would have hardly used 15.