Wednesday, August 08, 2007

மொழி

BSNL Broadband கடந்த சில நாட்களாக ஒழுங்காக வேலைசெய்யவில்லை. அலுவலிலும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், வீட்டிலும் இல்லாமல் திண்டாடிவிட்டேன். இன்னமும் முழுவதுமாக சரியாகவில்லை. இன்று சரி செய்வதாக சொல்லியிருக்கிறார்கள், பார்ப்போம்.

Broadband - தமிழில் அகல வரிசை...
Internet - இணையம்

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இப்படி கலைச்சொற்களை தமிழில் உருவாக்குவதன் மூலம் என்ன சாதிக்கிறோம். மொழியைக் காப்பாற்றுவதற்காக என்று சிலர் நம்புகிறார்கள். எனக்கு இது தமிழை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

இவற்றிற்கெல்லாம் தமிழில் சொற்கள் இல்லையென்றால் என்ன குறைந்துவிட்டது ? சிகரெட்டை சிகரெட் என்று அழைக்காமல், வெண்குழல் வத்தி என்று அழைப்பதில் என்ன தமிழ் உயர்ந்துவிட்டது ? யார் இந்தச்சொற்களை உருவாக்குகிறார்கள் என்று தெரிந்தால், தேடிப்பிடித்துச் சென்று பெர்சிய மொழியில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான சில கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு வரலாம் என்று இருக்கிறேன்.

இப்பொழுது இவர்கள் உருவாக்கும் தமிழ்-கலைச்சொற்கள், Derivative சொற்களாகத்தான் இருக்கின்றன. இப்படி செய்வது ஒரு மொழியின் கையாலாகாதத்தனத்தை காட்டும். கடந்த காலத்து அறிவியல் கண்டுபிடிப்புக்கள்கூட சில நாகரீகமான சொற்கள் பெற்றன. ரயில், வானொலி (அழகான பெயர்). சில சொற்கள் மருவி வருவதை அவர்கள் தடுக்கவில்லை.

ஆனால் இன்று சொற்கள் உருவாக்குவது அறிவில்லாதவர்கள் செயலாகிவிட்டது. மின் தூக்கி,சொடுக்கி என்று அழைப்பது அருவருப்பாக இல்லை ? கஷ்டமே இல்லாமல் இவர்களால் அனைத்து நவீன சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் உருவாக்க முடிகிறது. ஆனால் அவை சுவையாக இல்லை. சில சமயம் இச்சொற்கள்தான் மொழியின் வளமையைக் குறைக்கிறது. தமிழ் இத்துணை செம்மையாக இருப்பதற்குக் காரணம் இடைக்காலத்தில் பல மொழிச்சொற்களை வரவேற்று அவற்றை தமிழில் மருவிக்கொண்டது தான். உதாரணத்திற்கு சொல்வதானால் ரயில்கள் இந்தக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தமிழில் சொல் உருவாக்க வேண்டுமென்றால், இவர்கள் "தண்டவாள ஊர்தி" என்றுதான் உருவாக்கியிருப்பார்கள். Rail என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து மருவிவந்த ரயில் என்ற சுவையான வார்த்தை நமக்கு கிடைத்திருக்காது.

இதே பேட்டர்னில் போய்க்கொண்டிருந்தால் தூய தமிழில் அத்தனை வாக்கியங்களும் நீள நீளமாக இருக்கும். நீளமாக இருப்பதில் தவறில்லை. பொன்னியின் செல்வனில் ஒரு பெரிய பத்தி முழுவதும் ஒரே வாக்கியம் வருவது சுகமாகத்தான் இருக்கும். ஆனால் நான் குறிப்பிடுவது, அர்த்தமில்லாமல் Derivative சொற்கள் பயன்படுத்தி நீளமாக்குவது.

இப்படி மானாவாரியாக கலைச்சொற்களை உருவாக்கிவிட்டு அவற்றை ப்ரபல்யம் செய்யாமல் "தமிழைக்காக்க வேண்டும்" என்று மட்டும் கொடி பிடிப்பவர்களுக்கு தமிழின் மீது அக்கறை உள்ளதாகத் தெரியவில்லை.

நல்ல வேளை ப்ரிட்டிஷ்காரர்கள் அனைத்து நாட்டிற்கும் சென்று ஆங்கிலத்தை பிரபலமாக்கிவிட்டார்கள். ஒரு யுனிவர்ஸல் மொழியாக ஆங்கிலம் இருந்திராவிட்டால் ? நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கிறது.

7 comments:

Chakra said...

You know what? Lot of Brits have a regret... that lot of ppl all over the world speak English, but English ppl haven't taken any efforts to learn other languages.

Sowmya said...

"\\சிகரெட்டை சிகரெட் என்று அழைக்காமல், வெண்குழல் வத்தி ..//"

பாருங்கள்..வேலை மெனெகெட்டு நீங்களே புது சொல்லை கண்டு பிடிக்கவில்லையா..அது போலத்தான். புரிந்து கொள்ளத்தான் மொழி என்பதை யார் நினைவில் கொள்கிறார்கள். ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் சரியான வார்த்தைகளைச் கண்டுபிடித்துச் சொன்னால், தமிழ் காப்பாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள்.இது ஒரு வித அல்ப சந்தோஷம்.

Manki said...

நீங்கள் சொல்வதை முழுவதும் ஏற்கிறேன். (என்னுடைய ப்ளாகில் முதல் பதிவே ஏறத்தாழ இதைப்பற்றியது தான் :-) என்னைக் கேட்டால் தமிழை மட்டுமல்ல -- எந்த மொழியையும் யாரும் காப்பாற்றவோ அழித்துவிடவோ முடியாது. அதற்கான தேவை இருக்கும் வரை தமிழ் இருக்கும். இல்லாமல் போகையில் அழியும். அப்படி அழியும்போது அதைப்பற்றிக் கவலைப்பட யாரும் இருக்க மாட்டார்கள்.

SayMee said...

Hi Keerthi,

Sorry to post this in English as I do not have Thamizh font on my computer.

I totally agree with your views on this post. No language can kill another language. And you cannot save or make a language grow by tarnishing the other language.

Thanks!

Anonymous said...

Keerthi!
ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். சரியான தமிழ் சொல் இல்லாத வார்த்தைகளுக்கு நேரடியாக ஆங்கிலம் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் உச்சரிக்க அழகான, சட்டென்று பொருள் புரியும்படியான் வார்த்தைகளை தமிழிலேயே சொல்வதால் என்ன பிரசினை?
உதாரணம் - இணையம் என்பது Internetக்கான சரியான தமிழ் சொல்லாகவும், உச்சரிக்கவும் எளிதாக, அழகாக இருக்கும்போது ஏன் அதை தவிர்க்க வேண்டும்?
மேலும் நிரல்,ஒருங்குறி போன்ற வார்த்தைகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் பதிவிலேயே
//இதே பேட்டர்னில் போய்க்கொண்டிருந்தால்// என்பதற்கு பதில் "இதே ரீதியில் போய்க்கொண்டிருந்தால்" என்று சொன்னால் இன்னும் அழகாயுள்ளது என்பதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

மற்றபடி உங்களுக்கு அனுப்பின "எழில்வரதன் சிறுகதைகள்" தொகுதி எப்படி இருந்தது?

Anonymous said...

The above post was by myself

Regards
Venkatramanan

Keerthi said...

Chakra, oh !! adhu sari !! :P

Sowmya, வெண்குழல்வத்தி is not my invention. It is already in existence

Manki, உண்மை. நன்றி! :)

Saymee, You are right. Thanks !

Venkatramanan, முதல்ல நன்றி.. Nice collection. Iam reading it one per day.. and regarding your arguement.. I dont deny usage of sweet tamil words.. but i hate the derivation of words from its meanings. I hope you understand.