Friday, August 17, 2007

ஃப்ளாஷ்பேக் ஆசைகள்

அரை டாயர் போட்டுக்கொண்டு லேடீஸ் BSA SLRல் பயணம் செய்த நாட்களில் எடுத்த சில முக்கியமான வாழ்க்கை முடிவுகளை இப்பொழுதுதான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஏ. ஆர். ரகுமானின் "முக்காலா முக்காப்புலா" பாடலை ஒரு இருண்ட அறையில் Full Volume வைத்து அலறடிக்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கியமான முடிவு.

நேற்று முக்காப்புலா வீட்டில் முக்கியது. ஆஹா !

சிறு வயதில், நாம் பெரியவர்கள் ஆனவுடன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்போம். பெரியவர் ஆனவுடன் செய்ய நினைத்ததின் சுவையை மறந்துவிடுகிறோம். கேனத்தனமாக யோசித்திருப்போம். S. Ve. சேகர் "கதானாயகன்" படத்தில் யோசிப்பாரே....

" நல்லா சம்பாதிச்சு... பெரிய்ய்ய்ய்ய வீடு வாங்கனும் !" என்று பாண்டியராஜன் சொல்லுவார்.
அதற்கு S. Ve. சேகர் "ஆமாம்.. எவ்வளவு வாடகையா இருந்தாலும் பரவாயில்லை.. !வாங்கனும்" என்பார்.

அந்த நாட்களில் நமது சிந்தனை வட்டத்தின் வரம்பிற்குள் உதித்த சில யோசனைகள், ஆசைகள் இப்பொழுது பொறுத்தமற்றதாக இருக்கலாம். சில ஆசைகள் விபரீதமாகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்ட ஆசைகளையும் யோசனைகளையும் தேடிப்பிடித்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஆஹா ! நான் எவ்வாறெல்லாம் யோசித்திருக்கிறேன்.

கோயிலுக்கு வெளியே செருப்பு பாதுகாக்கும் தாத்தாவுக்கு, பெரியவனாகி சம்பாதித்தவுடன் நிறைய்ய்ய பணம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியிருக்கும். இன்று காரிலோ, கால் டாக்ஸியிலோ கோயிலுக்கு சென்றால், காரிலேயே செருப்பு கழட்டிவிட்டுத்தான் உள்ளே போகிறேன். அன்று நினைத்ததிலும், இன்று செய்வதிலும் இரண்டிலும் தவறில்லை. ஆனால் எங்கோ உதைக்கிறது.

எனக்குள் இன்னும் இருக்கும் பழைய கீர்த்திவாசனின் கேனத்தனமான சில ஆசைகளை கொஞ்ச நாள் நிறைவேற்றப் போகிறேன்.

பல ஆசைகள் நிறைவேறாது. உதாரணத்திற்கு, எனக்கு சினிமா தியேட்டரில் வேலை பார்க்கவேண்டும் என்று ஆசை. நாள் முழுவது சினிமா பார்க்கலாம், இலவசமாக. வேறொரு கற்பனையில் நான் வேலைக்கு போகும் போது போலீஸ்காரர்கள் கார் கதவை திறந்துவிட்டு சல்யூட் அடிக்க வேண்டும். வேறுவிதமான ஒரு பரிணாமத்தில், என் பெட்ரூம் முழுக்க மைசூர்பாகு இருக்க வேண்டும் என்று கூட நினைத்ததுண்டு.

இவைகள் அல்லாமல், சில அல்பத்தனமான ஆசைகளை நிறைவேற்றப்போகிறேன்.

உங்களுக்கு இப்படி ஏதாவது ஆசைகள் இருந்து நிறைவேற்றியிருக்கிறீர்களா ?

5 comments:

Chakra said...

A friend of mine had an 'aasai' and he turned that true as well...

but adhai sabaila solla mudiyaadhu. will mail u abt that.

As for me, I wanted to buy a pack of Cadbury's Gems and eat everything in front of my bro without giving a single one to him.. :)

KB said...
This comment has been removed by the author.
KB said...

எனது அந்தக் காலத்து ஆசை BSA SLR வாங்குவது (என்னிடம் cycle இல்லாத பொழுது)!

இப்பவும் எனக்கு SLR வாங்க ஆசைதான் ! ஆனால் D SLR!

இப்படி பேயரை மாற்றி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியது தான் ;-)

subbudu said...

நம்ம CM மேடம் மாதிரி வீட்டிலேயே சினிமா பார்க்கணும். பார்த்துக் கொண்டே இருக்கிறேன். மேட்டர் சால்வ்டு.

Keerthi said...

Chakra, Aasaiyai Niraivethunga !! :)

KB, அது சரி... wait for me !

Subbudu, :) முதல்ல அந்த டி.வி.டி. ப்ரொஜெக்டர் வாங்கனும். :P