Tuesday, September 04, 2007

லோகா சமஸ்தா சுகினோபவந்தூ !

நாக்கு மேலே பல்லை போட்டு சக்ரா ஸம்பத் ஒரு கேள்வி கேட்டுவிட்டார் (ஹா ஹா! சக்ரா ! கண்டுக்காதீங்க !!) . "ஆயிரம் போஸ்ட் போட்டியே... இதுனால லோகத்துக்கு என்ன நன்மைன்னு யோசிச்சியா ?" என்று சென்ற பதிவில் காமெண்டிருந்தார்.

"பாலுத்தேவர் ! பாலுத்தேவர் ! ன்னு சொல்றேளே.. தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா ?"
பளார் !பளார் !பளார் !பளார் !பளார் !

"நான் கரை சேர்ந்துட்டேன்.. நீங்க இன்னும் கரைசேரலையே !!"
பளார் !பளார் !பளார் !பளார் !பளார் !

ஸ்டாப் !
பேட் ரியாக்ஷன்.

அது.. அந்தகாலத்து சத்யராஜ் ரியாக்ஷன்.. இந்த காலத்து சத்யராஜ் ரியாக்ஷன்... ?
"ஹெ ! ஹெ ! என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே !! சக்ரா ! ப்ளாக் எழுதறதுனால லோக நன்மையா.. ஹ.. ஹா.. நான் எழுதாம இருந்தாத்தான் நன்மை..."

உண்மைதான். என் ப்ளாக்னால ப்ரயோஜனம் எதுவுமே இல்லை.
ஆனா.. எனக்கு போர் அடிக்குமே !!

சரியா மூணு வருஷம் ஆச்சு, அவ்யுக்தா ஆரம்பிச்சு. அப்போ இருந்த ப்ளாக் நிலமையே வேறு. நான் ஒரு பெரிய ப்ளாக்ரோல் வெச்சிருந்தேன். சராமாரியா விழுந்து விழுந்து ப்ளாக் படிப்பேன். காமெண்ட் எல்லாம் பறக்கும். ப்ளாக் படிச்சு முடிக்கவே நேரம் இருக்காது.

இப்போ 95% ப்ளாக்ஸ் குப்பை (என்னுதையும் சேர்த்துக்கலாம்).

முனுக்குன்னா ப்ளாக் ஆரம்பிச்சு... ஒரு தீம் வெச்சு எழுதறேன்.. *** வெச்சு எழுதறேன்னு ஆரம்பிச்சதுதான் ப்ராப்ளம். ஒரு நாற்பது பதிவுக்கு மேல் கண்டென்ட் இல்லாமல் மூச்சு திணறும். நான் படித்து இரசித்த சில ப்ளாகுகளின் கடைசி பதிவு 2006ல் இருக்கும். ஏன் ? எழுத நேரமின்மை என்பது முக்கியமான காரணமாக இருக்காது. எழுத டாபிக் / கண்டென்ட் இல்லை என்பது தான் பெரும்பாலான காரணம்.

இன்னுமொரு முக்கியமான காரணம்... ஆடியன்ஸ். என்னமோ ப்ளாக் எழுதியவர் எல்லாம் மாபெரும் கலைஞர் என்று ஒரு நினைப்பு. காமெண்ட் வரவில்லை என்றால் யாருமே தன் ப்ளாகை படிக்கவில்லை என்ற ஒரு டிப்ரெஷன். காமெண்ட் வரவேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற ஒரு பதிவு போட்டு.. ஒரு சொதப்பு சொதப்புவார்கள்.

சில பேர் அதி தீவிரமாக ப்ளாக் ஆரம்பிப்பார்கள். கதைகள், சமையல், கவிதை, பாட்டு, பிலாசஃபி, எகனாமிக்ஸ், காமெடி என்று பல்வேறு தலைப்புகளில் தங்களுக்கு தோன்றியதை வேறு வேறு ப்ளாக் எழுதி பராக்ரமம் செய்து, அதி சீக்கிரத்தில் ஓய்ந்துவிடுவர்... ப்ளாக் ப்ரொஃபைல் பார்த்தால் ஆறு ஏழு ப்ளாக் இருக்கும்.... ஆனால் எல்லாமே காலாவதியாகி இருக்கும்.. நானும் அப்படித்தான்... போட்டோஷாப் ப்ளாக் என்று ஒன்று ஆரம்பித்து நன்றாக வந்து கொண்டிருந்தது... அப்பொழுதுதான் காமெரா வாங்கினேன். போட்டோஷாப் பழக்கம் அங்கேயே நின்று போய்விட்டது. ப்ளாகும் தான்.

நூறு நூற்றைம்பது ப்ளாக் பதிவுகள் படித்து வந்தேன். இப்பொழுது அதிகபட்சம் இருபத்தைந்து ப்ளாக் மட்டும் படிக்கிறேன். அர்த்தமற்ற கேள்விகள்.. குழந்தைத்தனமான பதிவுகள்... மெச்சூரிட்டி என்ற பெயரில் அதிமேதாவித்தனமான உரையாடல்கள்... அடப்போங்கப்பா... புளிச்சுப் போச்சு.

ஆனால் எனக்கு அலுக்காத ஒரே விஷயம். காலை எழுந்தவுடன் ஏதாவது ஒன்று சென்ஸிபிளாக எழுதவேண்டும்... அல்லது க்ரியேட்டிவாக செய்ய வேண்டும்... என்று தோன்றியவுடன் என் ப்ளாகில் ஒரு போஸ்ட் இருக்கும். அது உலக மகா சொதப்பலாக இருக்கலாம்.. ஆனால்...

சுய திருப்தி.

இது போதும்.. நான் என் ப்ளாகை தொடர.

9 comments:

Gopinath Sundharam said...

Nice one! I always thought why should I vent out my thoughts, ideas, pollambals etc in a blog.. which by the way we do every day with our friends. Well, as you said, bottom line, it is just to get some mental satisfaction. Ennamo po!

PS: I'm in the same stage as you three years before -- reading everything and anything that I could see.. :)

Meena said...

I am reading your blog for about 1 year (cud be more than that). I have visited your blog from someone else blog roll. You update your blog almost daily and few posts are good..I like Dachu too...:) Keep blogging.. There cud be more silent readers like me..

Narayanan Venkitu said...

Creativity - That's your Trade Mark. It's in your blood ( IMHO ).

Not a day passes without visiting your blog.

Most of us bloggers are like what you mentioned. The intensity has stopped / decreased.

Good one Keerthi and thanks to Chakra for making your write this!

Srikanth said...

// சரியா மூணு வருஷம் ஆச்சு, அவ்யுக்தா ஆரம்பிச்சு. அப்போ இருந்த ப்ளாக் நிலமையே வேறு. //

Congrats !

Sowmya said...

Ithu vilakkama..villangama :P

yaru kudupa ilavasama oru idam ellathayum kotta...

yarum periya ezhuthalar nu solli blog ezhutharathey illa

vaaila pesi share panra mathiri , ezhuthu pesarathu. yarukku ethu ishtamo choose pannikarom.appadiye sila blog la onnume illanalum ..athuvum vendruke.

Eppavum..mysore pa saptundey iruntha nanna irukkumaa..

appappo oru vatha kozhambo.. illa.., karuveppla thogayalo sapta than jam jam nu irukum :P

sweet nothings la sugamum irukku!

1000 posts samanyam illa. karuthu kanthasamiya than irukanum na, unga padaiputh thiranai neenga izhanthirupeenga :)

I think, you have ur own circle of readers ONLY for your creativity in your blog

Keep on writing :)

Keerthi said...

Gopinath Sundaram, :) Adhenna ? ennamo po !

Meena, I certainly will. I know there are a lot of silent readers... My Hit counter keeps telling me that. Thanks for your visits. :)

Venkittu sir, Thanks a lot :) I still remember the days when we all were so very active on blogging.. Great ol days (ironically this is just 2 years back)..

Shrikanth, Thanks.

Sowmya, Im not sure if its just me... when i find a blog un-updated for more than 5 of my attempts.. or more than three consecutive posts are insensible (according to my low-standards).. i tend to loose interest.. And thats why my blogroll is so very little, nowadays..

Kalakkiteenga... said...

Than adakkama...adakka mudiya garvathai maraikka ? alladhu oru vishayam sadhitha perumaya.? Mattravargal kuripittadhu pola saamanyam illai 1000 posts poduvadhu ... Keep continuing with your Non-senseless posts :)

மங்களூர் சிவா said...

//
காமெண்ட் வரவில்லை என்றால் யாருமே தன் ப்ளாகை படிக்கவில்லை என்ற ஒரு டிப்ரெஷன். காமெண்ட் வரவேண்டும் என்பதற்காக அர்த்தமற்ற ஒரு பதிவு போட்டு.. ஒரு சொதப்பு சொதப்புவார்கள்.
//
//
சில பேர் அதி தீவிரமாக ப்ளாக் ஆரம்பிப்பார்கள். கதைகள், சமையல், கவிதை, பாட்டு, பிலாசஃபி, எகனாமிக்ஸ், காமெடி என்று பல்வேறு தலைப்புகளில் தங்களுக்கு தோன்றியதை வேறு வேறு ப்ளாக் எழுதி பராக்ரமம் செய்து, அதி சீக்கிரத்தில் ஓய்ந்துவிடுவர்
//
ரொம்ப கரெக்டா சொன்னிங்க

மூனு வருடமா தொடர்ந்து எழுதறதுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

Anonymous said...

Hey keerthi,
Sasikala here.
May be i have visited only a very few times wen I was there in india.
But after coming here, I felt i need to do something that has our tamilnadu touch. u knw how costly abt talking in phone for a new comer. I thought for a long time suddenly remembered ur blog. I started from ur Rajagopalan posting and readin it back...i am going to continue..wished to be a silent reader but felt saying something here, and know how much it helped and really created a mixed feeling like and made me to feel like as if i am there in India
who said idhu projanayam illa..siru thurumbum pal kutha udhavum :)
and sorry abt the long comment...nyway thanks