Friday, September 14, 2007

அப்பமோடு அவல் பொறி !
powered by ODEO


பிள்ளையார் நாற்பது ரூபாயாகிவிட்டார்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு விதமான விசாரிப்பு உண்டு.
பொங்கல் என்றால் "பொங்கல் பானை பொங்கித்தா !!" என்று கேட்பர்.
தீபாவளி என்றால் "கங்கா ஸ்னானம் ஆச்சா ?!" என்று...

ஆனால், பிள்ளையார் சதுர்த்தியன்று (இது சென்னைக்கு மட்டும் பொருந்தும் என்று நினைக்கிறேன்) விசாரிப்பு இப்படித்தான் ஆரம்பிக்கும்...

"என்ன ஸ்வாமி.. பிள்ளையார் வந்தாரா.. உம்ம புள்ளையார் எத்தனை ரூபா ??"......

"இந்தவாட்டி பிள்ளையாரெல்லாம் யானை விலை சொல்லறான் ..!!" (irony :)

"ஆமாமா ! நான் நாற்பது ரூபாயில் வாங்கினேன்., மூஞ்சியில களையே காணோம் !அங்கே இங்கே நசுங்கி வேற இருக்கு.. ஏண்டாப்பா ! கொஞ்சம் நல்ல பிள்ளையாரா கொடுண்ணா.. 'எல்லா சாமியிம் நல்ல சாமிதான் சாமி'ன்னு பிள்ளையாருக்கே சர்ட்டிஃபிகேட் கொடுக்கறான்... கஷ்டகாலம்..."

அரை டிராயர் காலத்தில், அப்பாவோடு சைக்கிளில் அமர்ந்து மார்க்கெட் போய் கூட்டத்தில் நசுங்கி கடலலைபோல் அபரிமிதமான எண்ணிக்கையில் தினுசு தினுசாக வெவ்வேறு அளவில் காட்சிதரும் பிள்ளையார் களிமண் பொம்மைகளில் ஒன்றை ஐந்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாய் வரை கொடுத்து வாங்கி, கோலமிட்ட பலகாய் கட்டையில் வைத்து மார்பு அளவில் திருப்பிப் பிடித்து வீட்டுக்கு மிடுக்கு நடை போட்டு வருவேன்... "போங்கடா ! பிள்ளையார் இன்னிக்கு எங்க வீட்டுக்குத்தான் வறாரு !!" என்ற எகத்தாள எண்ணம்.

வீட்டுக்கு வந்த வினாயகரை ஸ்வாமி ரூமில் (அதாவது சமையலறையின் ஒரு பகுதி) அமர்த்தி ஒரு குடையை விரித்து வைத்துவிட்டு எடுப்பேன் ஒரு ஓட்டம்.

தூர்தர்ஷனின் மொக்கையான "வினாயகர் சதுர்த்தி" சிறப்பு நிகழ்ச்சிகளில் மூழ்கவேண்டியதுதான்.. பிள்ளையாருக்கு அவ்வளவுதான் மரியாதை. அப்புறம், சில மணி நேரத்திற்கு பிறகு "யானி கானிச பாபானி..." என்று கொஞ்சம் உரக்க குரல் வரும்.. அப்படியென்றால் பூஜையின் க்ளைமேக்ஸ் என்று அர்த்தம்... "ப்ரதக்ஷணே பதே பதே !" என்று அப்பா சொல்லி முடிப்பதற்குள் வந்துவிட வேண்டும். அப்போதான் கொழுக்கட்டை.

இன்றும் அதே போல் மார்கெட் சென்று (அரை டிராயருக்கு பதில் வேட்டி) பிள்ளையார் வாங்கி வந்து ஸ்வாமி ரூமில் (இப்பொழுது ஹாலின் ஒரு பகுதி) வைத்து விட்டு, பிள்ளையார் சதுர்த்தி சம்பிரதாயமாக கமலஹாஸனின் பேட்டியை பார்த்துவிட்டு, யதாஸ்தானத்துக்கு வந்துவிட்டாகிவிட்டது....

ஆனால், இன்றைக்கும் அன்று பார்த்த அதே கனஜோரான கூட்டம். நண்டு சிண்டு எல்லாம் பலகாய் கட்டையை எடுத்துவந்திருந்தன.. "அப்பா ! அந்த கோல்ட் பிள்ளையார் பாருப்பா... அது வாங்கலாம்ப்பா !!" என்று நச்சரித்துக்கொண்டிருந்தன. "அந்த கோல்டு பிள்ளையார் எவ்ளோப்பா ?"..."இதுவா சார் !! எண்பத்தஞ்சு..."... மைல்ட் அட்டாக் வந்த அப்பா தன் மகளிடம் "சுவாமி எல்லாம் சிம்பிளா இருக்கனும்.. " என்று சமாதானம் சொன்னபடியே அங்கிருந்து அகன்றார்.

அழுக்கான எருக்கம்பூ மாலை ஐந்து ரூபாய். பிள்ளையாரப்பா ! நீர் நடத்தும்.

ஆஹா !! "யானி கானிச பாபானி..." கேட்கிறது.

சாப்டுங்க !!


6 comments:

subbudu said...

ahaa pithukuli murugadoss. voice of the century for devotional songs.

btw, cool ferrari pillayar.

revatechnic said...

hahahaha :)

Anonymous said...

Nicely written! But antha vinayagar chathurthi visarippu chennaikku mattum porutham alla, Bangalorekkum porunthum....I won the bargain today morning by paying him Rs 60 when he quoted Rs 120/-

Arun (Shrikanth's cousin)

Jeevan said...

Enga pillaiyarum rs.40 than

Keerthi said...

Anon, Rs. 120 ? Yamma !!

மங்களூர் சிவா said...

ஆஹா என்னய்யா கீர்த்தி

கொசுவத்தி எல்லாம் சுத்த வைக்கிற (flash back)

கொழுக்கட்டை பார்சல் அனுப்பவும்!!