Friday, November 30, 2007

செல் ஃபோன் செலவு


ஸ்ரீகாந்த் எடுத்த இந்த ஃபோட்டோவுக்கு ப்ரதி உபகாரமாக, அவனுக்கு மட்டும் ஸ்வாதித் திருனாள் பாடல் ஒன்று பாடிக்காமிக்கலாம் என்று இருக்கிறேன். அவன் பயந்து ஓடாமல் இருக்கும் வரை.

இப்பொழுதெல்லாம் ப்ரம்மா மனிதர்களைப் படைக்கும் பொழுது ஒரே ஒரு காதுடன் மட்டும் படைக்கிறார். இன்னொரு காதை நோக்கியாவும், மோட்டரோலாவும் படைக்கின்றனர். அந்த அளவுக்கு ஆளாளுக்கு காதுகள் தெரியாமல் பேசிக்கொண்டு அலைகின்றனர். மிகச்சில ஆண்டுகள் முன் இருந்ததைவிட மொபைல் ஃபோன் பயன்பாடு அபரிமிதமாக வளர்ந்துவிட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இன்னும் வளரும்.

"மொபைல் வாங்கனும்னு ஒரே அடம் சார். அதுவும் ம்யூசிக் எடிஷன்தான் வாங்கனுமாம் ! இப்பொ எதுக்குடான்னு கேட்டா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வெச்சிருக்காங்க ! அவங்க முன்னாடி அவமானமா இருக்காம். பொடலங்கா வயசாகலை.. அதுக்குள்ளே ப்ரெஸ்டீஜ் பார்க்க ஆரம்பிச்சுட்டானுங்க. இந்த ப்ரெஸ்டீஜை படிப்புல காணோமே !!" என்று புலம்பும் தந்தைகள் இரண்டு வாரங்களில் ம்யூசிக் எடிஷன் வாங்கிக் கொடுக்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், காலேஜ் யுவன்கள், யுவதிகள் முதற்கொண்டு அனைவரும் செல்ஃபோன் வாங்க ஆரம்பித்தாயிற்று.

நடுவில் நண்பர் அடேங்கப்பா பிரபு அனுப்பியதை லின்க்குகிறேன்.
பதினேழாயிரம் கொடுத்து தம்மாத்தூண்டு செல்ஃபோன் வாங்குவதில்தான் ப்ரெஸ்டீஜ் அடங்கியிருக்கிறது என்று நம்பும் பலரை நான் தினமும் பார்க்கிறேன். அப்படி பதினேழாயிரம் கொடுத்து வாங்கும் செல்ஃபோன்கள், அப்படி என்ன ப்ரதாபங்கள் புரிகின்றன என்று பார்ப்போம்.

கைக்கு அடக்கமாக, ஸ்லீக்காக கண்ணைப்பறிக்கும் டிசைனில் இருக்கிறது. காமிரா இருக்கிறது. பாட்டுப்பாடுகின்றது. ரேடியோ எடுக்கிறது. சினிமா காண்பிக்கிறது. டார்ச் லைட் எரிகின்றது. காலெண்டர் குறிப்பு எடுக்கின்றது. பக்கத்திலிருக்கும் செல்ஃபோனுடன் ப்ளூடூத் சல்லாபம் செய்கிறது. சினுங்குகிறது. அலறுகிறது. எல்லவற்றிர்க்கும் நடுவே கொஞ்சமாக ஒரு ஃபோனாகவும் செயல்படுகின்றது.

வருங்காலத்தில் மொபைல் ஃபோன்கள் இன்னும் என்னென்ன செய்யுமோ !! துணிதுவைத்து அலசி, காயவைத்து, இஸ்திரி செய்து கொடுத்தாலும் கொடுக்கலாம்.

இப்பேற்பட்ட ஃபோன்களை வாங்கி எப்படி பயன்படுத்துகிறார்கள் ?

ஃபோன் வாங்கிய புதிதில் கண்டதையும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். ஒரே கையில் ஸ்டைலாக ஃபோட்டோ எடுத்து உடனே நண்பர்களுக்கு ஃபார்வோர்ட் செய்கிறார்கள். மச்சான், பில்லா சாங்க்ஸ் இருக்கு வேணுமா ? ப்ளூடூத் ஆண் பண்ணு.. என்று வினியோகம் செய்கிறார்கள். இதற்கு நடுவே த்ரிஷா குளியல், கரீனா முத்தம் என்று பொது சேவை வேறு. ஃபோன் வாங்கிய முதல் நான்கு நாட்கள் மட்டும்தான் இந்த அல்லோலகல்லோலம் எல்லாம். அதற்குப்பின் அந்த கேட்ஜட் தேமே என்று ரேடியோ மிர்ச்சி ஒலிபரப்பிக்கொண்டு இருக்கும். பதினேழாயிரத்தின் மதிப்பு அம்புட்டுத்தேன். காசை கரியாக்கும் நூதன வழி.

இதற்கு மேல் உபரி செலவு வேறு. ஃபோன் கெட்டுப்போகாமல் இருக்க மேலே கர்ண கொடூரமாக ஒரு ப்ளாஸ்டிக் உரை வாங்கி அந்த ஃபோனின் அழகை வதைப்பார்கள். இனிமேல் அது அழகாக இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன ? ஹ்ம்ம். இது தவிர ரொம்ப நேரம் கையில் வைத்துப் பேசி, கையில் வலியும், கழுத்தில் சுளுக்கும் வராமல் இருக்க வயர்லெஸ் ஹெட்செட் வாங்குகின்றனர், சிலர். என்னடா இது காதோரம் க்ராப் சரியாக வெட்டவில்லையே என்று உன்னிப்பாகப் பார்த்தால் ஒரு ப்ளூடூத் காதை வட்டமிட்டு கண்சிமிட்டும். தனக்குத்தானே பேசிக்கொள்வது போலே பலமைல் கடந்து பேசிக்கொண்டிருப்பவர்களை பைத்தியங்கள் என்று பல பேர் நினைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு.

நான் பார்த்ததிலே அதிதீவிரமான செல்ஃபோன் பயன்பாடு, சினிமா தியேட்டர் வாசலில்தான். ஆறரைமணி நெருங்க நெருங்க செல்ஃபோன்கள் படபடக்கும். இது தவிர அதிகமாக பயன்படுத்துபவர்கள், புதிதாக திருமண நிச்சயம் ஆனவர்கள். அதற்கு தனியாக புஸ்தகமே போடலாம். அப்புறம் காதலர்கள். முன்சொன்னவர்களுக்கும் பின்னவர்களுக்கும் மயிரிழை வித்தியாசம்தான் என்று நினைப்பவர்கள் க்ரவுண்ட் ரியாலிட்டி அறியாதவர்கள். :). வயோதிகர்கள் வெறும் டார்ச் லைட்டையும் கடிகாரத்தையும் மட்டுமே அதில் யூஸ் செய்கிறார்கள்.

இதில் செல்ஃபோன் பேசிக்கொண்டே சாலையைக் கடக்கும் ப்ரஹஸ்பதிகள் வேறு. (இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுக்க முடியாது).

நான் பார்க்கும் வரை என்னுடையது உட்பட எழுபது சதவிகிதத்துக்கு மேல் உருப்படியில்லாத சமாச்சாரங்களுக்காகத்தான் செல்ஃபோன் பயன்படுகின்றது. இதற்கு இவ்வளவு செலவு தேவையா ?

4 comments:

indianangel said...

vaasthavam keerthi indha maadhiri naan kooda sila nerangala nenachadhunduu

Anonymous said...

hehehe..
enaku oru link pottu.. aana PK innai varaikum Nokia 1108 (adhavadhu 1100 voda sister mobile) use panraan nu oru vilambaram koduthirkalaam :D
-expertdabbler
(blogger password invalid nu imsai panudhu ba!)

Shivathmika said...

rightly said keerthi, waste of money...

Lavanya said...

Very true and nicely written. Kaasu vaithukondu enna seyvadhendru aariyaamal iruppavargalukku costly mobiles seriyaana choice :)