Tuesday, December 11, 2007

ஓம் ஷாந்தி ஓம் - Behind the Scenes :)

நம்மில் பாதிப்பேர் கதை எழுத உட்காரும்போது, முடிவை உத்தேசமாகவாவது தீர்மானம் செய்துகொள்கிறோம். எப்படிச் சொல்கிறேன் என்றால், மூன்று பத்திகள் தாண்டுவதற்குள் முடிவு எனக்குத் தெரிந்துவிடும். ஏனென்றால், கதாசிரியர் முடிவை நோக்கி கதையை வழி நடத்திச்செல்ல முயற்சி எடுப்பார். பல சமயங்களில் இவை அப்பட்டமாக இருந்து கதையின் ஸ்வாரஸ்யத்தை குறைக்கும்.

இது ஒரு புறம் இருக்கட்டும். Lets give our discussion, entirely, another dimension.

ஒரு உதாரணம் - "பாபு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது இறந்துவிட்டான். ஏன் ?" என்று ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பீர்கள். சும்மா உங்கள் கற்பனையில் இச்செய்தியை வைத்து இதற்கு என்னென்ன விடை சொல்லலாம் என்று யோசித்துப்பாருங்கள். கொஞ்சம் குரூரமாக இருக்கும்... இருந்தாலும் பரவாயில்லை. முயற்சி செய்யுங்கள்.

இறப்பைப்பற்றி வருவதனால், இது மோசமான உதாரணமாக க்ரஹிக்கப்படலாம். இருந்துவிட்டுப்போகட்டும். பாயிண்ட் என்னவென்றால், நமது கற்பனைத்திறமையின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதை இக்கேள்வியின் பதிலை வைத்து நம்மால் க்ரஹித்துக்கொள்ளலாம். பெரும்பாலானோர் "பாபு" சாலையில் டூவீலரில் செல்வதாகக் கற்பனை செய்து கொள்வீர்கள். ஆக்ஸிடண்ட் பற்றி யோசிப்பீர்கள். அதைத்தாண்டி ?

உதாரணக்கேள்விக்கு உதாரண விடை ஒன்று - "மேலே இருந்த மேம்பாலம் இடிந்து அவன் தலைமேல் விழுந்தது". (சமீபத்தில் நான் ரசித்த கேள்வி பதில் இது).

!

இம்மாதிரி, சாதாரணமான விவரிப்புடன் செல்லும் ஒரு கதையில் ஒட்டுமொத்தமாக ஒரு ட்விஸ்ட் கொடுக்க ஆசைப்பட்டு எழுதிய கதை "ஓம் ஷாந்தி ஓம்".

திலீப் வஸந்தி இருவரும் வெவ்வேறு காலத்தோர். வஸந்தி - "பின்னி மில்ஸ்", "ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்", "ப்ளைமவுத்", "ஆராதனா" காலம். திலீப் இன்றைய ஆள். வஸந்தி கடற்கறையில் துர்மரணமடைகிறாள். அப்புறம் எப்படி சந்தித்துக்கோள்ள முடியும் ?

இக்கதையின் முடிவுதான் முதலில் தீர்மாணிக்கப்பட்டது. ரிவர்ஸ் இஞ்சினியரிங் செய்து நெய்யப்பட்டதுதான் பாக்கிக் கதை. கடைசியில் வரும் திருப்பம் பல பேருக்கு (எட்டு பேருக்கு மட்டுமே இப்பொழுதுவரை புரிந்துள்ளது) புரியாமல் போனது எனது தோல்வியே.

பரவாயில்லை. இன்னும் இதுபோல் முயற்சிகள் எடுத்து கதையமைப்பில் புதிய உத்திகளை எக்ஸ்பெரிமெண்ட் செய்யப்போகிறேன். (மேல் சொன்ன கதை உத்தி ஒன்றும் புதிதல்ல).

வாசகர்கள் பொறுத்தருள்க.

4 comments:

expertdabbler said...

mudivu therinjikka padikaradhu oru vidham keerthi..

naan neraya kadhaigal padikaradhu mudivukaaga illai..

mudivu edhirparthadha irundhaalum
ennai mothama immerse pannika mudinjudhunna adhu dhaan nalla kadhai..

Manki said...

நீங்க விளக்கினதுக்கு அப்புறம் தான் எனக்குப் புரியுது. தொடர்ந்து எழுதுங்கள் ப்ளீஸ்!

Shobana said...

Understand panna mathirium irrukku, illatha mathirium irrukku. But thanks for the follow up. I am going to assume, Dilipkku payu pidichuirrukunnu. Idhukku mela oru kathaiya ennanu explain panna mudiyum neengalum thaan.

(Some people are extremely dense in some situations. Athu maathiri thaan ithuvum. I think I am trying to read too much into the story).

Arunram said...

ஒண்ணும் புரியல இன்னமும்.. :-)