Tuesday, January 01, 2008

ஜோஸ்யம் பார்க்கலையோ !

2008 எப்படி இருக்கும் ?

மூன்று வருடங்களாக லீவ் போடாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நம் பிரதமர், தொடர்ந்து ப்ரச்சனை எதுவும் இல்லாமல் ப்ரதமராகவே நீடிப்பார். இடது சாரிகள் எப்பவும் போல் உறுமிக்கொண்டும், பயமுறுத்திக்கொண்டும், பின்னர் பயந்துகொண்டும் இருக்கும்.

நரேந்திர மோடி தேசிய அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்வார். பி.ஜே.பி யின் முக்கிய பதவி அவருக்கு நிச்சயம் உண்டு. தேவே கெளடா இந்த வருடம் கையை கட்டிக்கொண்டு உட்கார வேண்டியதுதான்.

நம்ம தமிழக அரசியலில் "ஸ்டாலின் முதன்மந்திரி ஆகப்போகிறார்" என்ற வதந்தியும், "கருணாநிதி இந்த வருடம் தாண்ட மாட்டார்" என்ற ஊகமும் தொடரும். அவர் குடும்பத்தில் வேறு ஏதாவது நண்டு சிண்டு புதிதாக முளைத்திருந்தால் அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர் ஆகும் யோகம் நிச்சயம் உண்டு.

ஜெயலலிதா மூன்றாவது அணிக்கு அல்வா கொடுத்துவிட்டு பி.ஜே.பி யுடன் அபயக் கூட்டணி அமைப்பார்.

மே மாசம் மழை சர்வ நிச்சயம்.

தசாவதாரம் முக்கி முனகி வெளியே வரும். சிம்புவும், சூர்யாவும் கமலஹாசன் தலை சிறந்த நடிகர் என்று பேட்டி கொடுப்பதை தொலைக்காட்சிகள் கவர் செய்து காண்பிக்கும். தீபிகா படுகோனே ஏதாவது தமிழ்ப்படத்தில் தலை காட்டுவார்.

குட்டி குட்டிப் பத்திரிக்கைகள் வெகுவாகப் பெருகும். இந்த வருடம் வெளிவரும் மாணவர்களுக்கு மென்பொருள் வேலைகளுக்கு சம்பளம் குறையும்.

2010 ரிசெஷன் பற்றி இந்த வருடம் நமது தேசத்தில் பேச்சே இருக்காது. வெளி நாடு செல்லும் விமானக் கட்டணங்கள் இன்னும் குறையும். இரயில் கட்டணம் லேசாக உயரும்.

வருடம் தேய தேய "ஒபாமா பேரக்ஸ்" அல்லது "ஹில்லாரி க்ளிண்டன்" பற்றி விவாதங்கள் ஆரம்பிக்கும். முதல் கருப்பு ஜனாதிபதியா அல்லது முதல் பெண் ஜனாதிபதியா என்பது குறித்து சம்பந்தமே இல்லாமல் இங்கே விவாதங்கள் ஆரம்பித்து நவம்பருக்கு முன் முடிந்துவிடும். ஆனால் எந்த டெமாக்ரடிக் கட்சிக்காரர் வந்தாலும் புஷ்ஷின் பரோபகாரத்தால் ரிபப்ளிகன் பார்ட்டி மண்ணைக்கவ்வப்போவது நிச்சயம்.

சென்னை: கத்திப்பாரா லூகாஸ் பாலங்கள் முடிவுக்கு வரும். ஆனால் திறக்கப்படுவது சந்தேகம். ஓல்டு மஹாபலிபுரம் சாலை நாவலூர் தொடும். செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை சாதனை தொடும். நெல்சன் மாணிக்கம் ரோடும், ஆர்காட் ரோடும் பிதுங்கி வழியும்.

சென்னையின் ரியல் எஸ்டேட் கொஞ்சமாக தலை குனிய ப்ரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் வீடு வாங்க நினைப்பவர்கள் தக்ஷிணாயனத்தில் வாங்குவது உசிதம்.

மின்சாரமும், சமயல் எரிவாயுவும் விலை உயர்ந்தே ஆக வேண்டும். அதற்கு பதிலாக நம்ம சிதம்பரம் எல்.சி.டி. டி.வி மீது வரி குறைத்து ஏழை மக்களுக்கு நன்மை செய்வதாக காண்பிக்கலாம். ஆனால் இன்வெஸ்ட்மெண்ட் ஸ்லாப் ஒரு லட்சத்திலிருந்து, இரண்டு லகரமாக உயரப்போவதாக வதந்தி. பார்ப்போம்.

2007 என்னைக் கொஞ்சம் படுத்திவிட்டது. 2008 நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது. அடுத்த ஜனவரி ஒன்னில் இதைப்பற்றி சொல்கிறேன்.

அதுவரை...

4 comments:

Ghost Particle said...

super prediction sar. But isnt it sad that half of all predictions will contain political matter. yenna kodumai sar ithu. India, malaysia, pak, america...etc.

p/s: hope Captains party will go to new heights.

dhaaa said...

good one!!!

dare to put these things.....

"கருணாநிதி இந்த வருடம் தாண்ட மாட்டார்" என்ற ஊகமும் தொடரும்?????

Ninaipathellam nadandhuvittal... said...

Athiradiyaana oru isai amaippaalar cinema thuraiyil thalai katta pogum varudam

expertdabbler said...

Sila predictions kandippa nadakkum nu thonudhu!

for e.g
>>அவர் குடும்பத்தில் வேறு ஏதாவது நண்டு சிண்டு புதிதாக முளைத்திருந்தால் அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர் ஆகும் யோகம் நிச்சயம் உண்டு.

>>சிம்புவும், சூர்யாவும் கமலஹாசன் தலை சிறந்த நடிகர் என்று பேட்டி கொடுப்பதை தொலைக்காட்சிகள் கவர் செய்து காண்பிக்கும். தீபிகா படுகோனே ஏதாவது தமிழ்ப்படத்தில் தலை காட்டுவார்.

Nee solradhu S J Suryah va dhaaney?? You can also add Aryah..
Idhellam kandippa Pongal, matrum thamizh puthandu dhinathandru nadakkum..

>>மின்சாரமும், சமயல் எரிவாயுவும் விலை உயர்ந்தே ஆக வேண்டும். அதற்கு பதிலாக நம்ம சிதம்பரம் எல்.சி.டி. டி.வி மீது வரி குறைத்து ஏழை மக்களுக்கு நன்மை செய்வதாக காண்பிக்கலாம்.

Correct.. Appo dhaan adutha election la 'ilavasa color tv'la irundhu ilavasa LCD TV ku upgrade aaga mudiyum!


predictions which are likely to go wrong

>>சென்னை: கத்திப்பாரா லூகாஸ் பாலங்கள் முடிவுக்கு வரும்

enna pechu pesare nee?
2011 assembly election varaikum mudiyama parthupaanga!

>>2007 என்னைக் கொஞ்சம் படுத்திவிட்டது. 2008 நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது

ilavasa plasma TV a manasila vechu solriya therila!