Tuesday, May 13, 2008

ஹாபி - 3

"to follow a favourite pastime" என்று ஒருவர் சென்ற பதிவில் விகிபீடியா டெஃபனிஷன் கொடுத்தார். அதெல்லாம் சர்தான் வாத்யாரே ! நீங்கள் உங்கள் பொழுதை சுவைபட செலவழிக்கிறீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியே !

பொருள்படி் செய்தல் - பொருள்கொள்ளும் வண்ணம் செய்தல். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.

வேலை வெட்டி இல்லாத பொழுது என்பது வெள்ளைக் காகிதம் போன்றது. அதில் ஓவியம் வரையலாம். கதை எழுதலாம். காகிதப் பொம்மை செய்யலாம். வெறித்துப் பார்க்கலாம். கிழித்துப் போடலாம். எண்ணை தடவி ட்யூப் லைட் அடியில் கட்டி விட்டு பூச்சிகளை சாகடிக்கலாம். என்னென்னெமோ செய்யலாம் ! இல்லையா ?

உங்களை ஒரு அரேபிய ஷேக்காக கற்பனை செய்து பாருங்கள். ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டே, வலது கையை ரங்கநாதரைப்போல் தலைக்கு வைத்துக்கொண்டு இடது கையால் உட்க்காவை குடித்துக் கொண்டிருப்பது போல் நினைத்துப் பாருங்கள். இரண்டு நாள் பூராவும் இதையே செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?

இரண்டு நாட்கள் தொடர்ந்து, "விட்டேனா பார்" என்று டி.வி. பார்ப்பதும், இதுவும் ஒன்று தான். (சண்டை போட நான் ரெடி !!! கமான் !! கூகிள் டாக் மீ ! ). எக்ஸ்டசி ஊசி குத்திக்கொண்டு "பரப்ரம்மம்" போல சோபாவில் உட்கார்ந்து கொண்டோ, அல்லது அகஸ்மாத்தாக ஒரு யோகாசனத்திலோ (ஹலாசனா !) அமர்ந்து ஜோடி நம்பர் ஒன் பார்ப்பதை ஒரு ஹாபி என்று சொன்னால் - ம்ஹும் !! நீங்கள் அசமஞ்சம் கேட்டகரியில் சீக்கிரம் விழப்போகிறீர்கள்.

அப்படிச் செய்வது தவறு என்று நான் கருதவில்லை. ஆனால், உங்கள் பொழுது மற்றவர் கையில் செல்வதை உணர்கிறீர்களா ? உங்கள் ஹாபி டி.வி. பார்ப்பது என்றால், நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தால் தான் உங்கள் பொழுது கழியும். இல்லையென்றால் ரிமோட் பட்டனின் எழுத்துக்கள் தான் அழியும் (த்சோ ! த்சோ! த்சோ!). சீக்கிரம் போரடிக்கும். சுவையான நிகழ்ச்சி ஒன்றூம் இல்லையென்றாலும் டி.வி. மென்னியைத் திருக நீங்கள் தயக்கப் படுகிறீர்கள் என்றால் "டி.வி இஸ் நோ லாங்கர் யுவர் ஹாபி ! இட் இஸ் எ செடேஷன்". என்டெர்டெயின்மென்டையும் ஹாபியையும் கலந்து கட்டி அடிக்காதீர்கள். கொஞ்ச நேரம் கிடைத்தால் எங்கே என்டர்டெயின்மென்ட் என்று அலைபாய விடாமல், சற்று அவுட் ஆப் தி பாக்ஸ் யோசித்து செலவு செய்யுங்கள்.

நிற்க.

நான் டி.வி பார்ப்பதை நான் விட்டொழித்து நான்கு வருடங்கள் ஆகப் போகிறது. அதனால் யோக்கியம் என்று இல்லை. டி.வீ க்கு பதிலாக கம்ப்யூட்டர். பெரிய வித்தியாசம் இல்லை. சீரியலுக்கு பதில் வெப்சைட்டுகள்... ரிமோட்டுக்கு பதில் கீபோர்ட்.. அதே உட்கா தான்.

ஆனால், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் கான்ஷியஸாக ஸ்பெண்ட் செய்கிறேன். என்ன செய்கிறேன் என்பதெல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே ! ஒரு சில எக்ஸ்பெரிமெண்டுகளை இன்னும் பிரகடணப் படுத்தாமல் வைத்திருக்கிறேன். காரணம், அவை பெரிதாக சோபிக்கவில்லை. இருந்தாலும் என் லீஷர் டைமை கொஞ்சம் டைனமிக்காக செலவழித்த திருப்தி எஞ்சியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டைச் சுற்றி கார்டன் வைத்திருக்கிறார். அவர் பாஷையில் சொல்லப்போனால், கார்டனுக்கு நடுவில் வீடு வைத்திருக்கிறார். வேலை முடித்துவிட்டு வந்தவுடன், வீட்டுக் கடமைகளையும் காப்பியையும் ஒருசேர ஆற்றிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுவிடுவார். அங்கே ஒவ்வொரு மரம், செடி, கிளை, இலை இவற்றுடன் கிட்டத்தட்ட உரையாடுவார். புதுச் செடிகளை வருடிக் கொடுப்பார். கொடிகளை நீவி விடுவார். குப்பை நீக்கி சுத்தம் செய்வார். எனக்கு அதைப் பார்க்க "கடவுளும் இதைத்தான் செய்கிறார்" என்று தோன்றும். சின்னதாக அவர் வளர்த்த அவரது உலகம்.. அதில் அவர்தான் கடவுள்.

அவர் பொறுமையும், இன்ட்ரெஸ்டும் பொறாமைக்குறியவை. அவ்வளவே ! பின்பற்ற த்ராணியுமில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் அதற்கு குடுப்பினையும் இல்லை. ஆனால், எனக்கென்று சில ஹாபிக்களை கண்டுபிடித்து பொழுதைக் கழித்து வருகிறேன்.

"என் சொந்த டைம். நான் எப்படி வேண்டுமானால் செலவழித்துவிட்டுப் போகிறேன்." என்பீர்களேயானால், "Of course ! You should !" என்பது என் பதில். "காலம் பொன் போன்றது !" என்பதெல்லாம் என் கட்சியில்லை. செலவு செய்வது என்பது கலை. பணமாக இருந்தாலும் சரி. காலமாக இருந்தாலும் சரி. ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லுவார்கள் - "Cultivate a good hobby".

எப்படிச் செலவழிக்கலாம் என்று கேட்கிறீர்களா ? போய் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து யோசியுங்கள். தட் வுட் பீ எ குட் ஸ்டார்ட்.

2 comments:

Ramya harish said...

Enna keerthi, unga post la english konjam adigama thalai thookudhe..
Personal time a namma sondha vishyathuku useful a fully occupied a selavazhichaale, adhe oru thani trupthi..
Adha vitutu tv ku munnadi jodi no1, jackpot nu okaarardhu , not my choice..

prabukarthik said...

Man You are spot on!
Nee avasiyam FLOW padikanum keerthi!