Saturday, May 24, 2008

Family Photo

Family Photo (!)

மங்களூர் சென்ற காரணம் - நண்பரின் திருமணம். அங்கே எடுத்த புகைப்படம் மேலே காண்பது.

பெண்ணின் அம்மா கமண்டலத்திலிருந்து நீர் ஊற்ற, பையனின் தந்தை தட்டை ஏந்திக்கொள்ள, பெண்ணின் தந்தை தாரை வாற்றிக்கொடுக்க மணப்பெண்ணின் கரத்தை மணமகன் தாரைவாங்கிகொள்கிறார். அதனால்தான் Family Photo. :)

Kids at a Wedding DiningSeer !! Silver
Cute Kid at a weddingMr. Ganapathy and Mrs. Ganapathy

"துளு" பாஷை பரவியிருந்த மண்டபத்தில் வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்த போது, பலபேர் ரேட் விசாரித்தனர். "வீடியோ எடுப்பீங்களா ?", "ஒரு ரோலுக்கு எவ்வளவு ?" என்றெல்லாம் துளுவில் அவர்கள் கேட்டது எனக்குப் புரிந்தது. ஆனால் பதிலுக்கு "நான் மாப்பிள்ளையின் நண்பர். சும்மா பொழுதுபோக்குக்காகவும், ப்ளாகில் போட்டு பிலிம் காமிக்கவும்தான் போட்டோ எடுக்கிறேன்..!" என்று சொல்லி புரியவைக்க முடியவில்லை.

கல்யாணம் கிட்டத்தட்ட நம்ம ஊர் பழக்கவழக்கங்கள் தான். ஆனால் கல்யாண சாப்பாடுதான் மலையளவு வித்தியாசம். இரண்டு தளங்களில் உணவருந்த இடம் இருக்கும்போதே டவுட் ஆனேன். ஆயிரக்கணக்கில் உறவினர்களும் நண்பர்களும் முகூர்த்த நேரத்தில் ஆஜர். ஓடிப்போய் மாடியில் மூன்று பேரும் உட்கார்ந்துகொண்டோம்.

அகோரப் பசியில் இருந்தோம். ஒவ்வொரு ஐட்டமாகப் பறிமாறப் பறிமாற கபளீகரம் செய்துகொண்டே வந்தோம். சாதம் மட்டும் வரவேயில்லை. என்னடா என்று பந்தியைவிட்டு கொஞ்சமாக எட்டிப் பார்த்தால், டைனிங் ஹாலே எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். யாருமே இன்னும் இலையில் கை வைக்கவில்லை. ஊப்ஸ் !! நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். "ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் ஹங்கர்".

தவறு செய்துவிட்டோம். இனிமேல் "ஐ காண்டேக்ட்" செய்யக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டு இலையில் பாயசம் இருந்த இடத்தை வருடிக்கொடுத்து இலையின் நரம்புகளை ஆராயும் நரம்பியல் நிபுணர்களைப்போல சமர்த்தாக உட்கார்ந்து கொண்டோம். அப்புறம் மெதுவாக சாதமும் நெய்யும் பறிமாறிவிட்டு "கோவிந்தா" என்று பெரிதாக குரல் எழுப்பிவிட்டுச் சென்றனர். ஜாலியன் வாலா பாக்கில் ஜெனரல் டயர் "சார்ஜ் !!!!" என்று சொன்னவுடன் என்ன நடந்ததோ, அது அப்படியே நடந்தது. ஒரு ஐட்டத்துக்கும் பெயர் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருந்தது.

கல்யாணக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் வரிசையாக வந்து பந்தியில் விசாரித்தனர். எங்களிடம் வந்த போது, நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறது போல, தமிழர்கள் என்று கண்டுகொண்டு கொஞ்சு தமிழில் உபசரித்தனர். "வெட்கப்படாம சாப்பிடுங்க...!" என்று அடிக்கடி சொன்னது நெருடலாக இருந்தது.

நண்பர் தன் புது மனைவியுடன் வந்து பந்தியை விசாரித்துக்கொண்டிருந்தார். அவர் கூட இருக்கும்போது, அவரை விட்டுவிட்டு சாப்பிட்டதே கிடையாது. இனிமேல் கண்ட வேளைகளில் அவரைக் கூட்டிக்கொண்டு ஊர் சுற்ற முடியாது. சினிமா, பீச், ஹோட்டல் போன்ற புண்ணியஸ்தலங்களுக்குப் போய் வர ஒரு கை குறைந்துவிட்டது என்பதை எண்ணி கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு பதர் பேணி சாப்பிட்டோம்.

3 comments:

Shivathmika said...

photo romba alaga vandhurukku.superb..

Ravi said...

Keerthi, full-a parimaariya ilai-yai click senju innum enga vayitherichalai vaangikattirupeenga-nu edhirpaarthen!! Ippadi kavuthiteengalae!!

Had a similar experience in another North Karnataka household sometime back. Being a household ceremony, the guests were not too many and we were seated on the floor with the banana leaves and all the 'accessories' served except rice. Again, we hardly realised that we should've waited till the host walks across each guest and gives "theertham", which officially signifies that food can be eaten.

Adaengappa !! said...

//அவர் கூட இருக்கும்போது, அவரை விட்டுவிட்டு சாப்பிட்டதே கிடையாது. இனிமேல் கண்ட வேளைகளில் அவரைக் கூட்டிக்கொண்டு ஊர் சுற்ற முடியாது. சினிமா, பீச், ஹோட்டல் போன்ற புண்ணியஸ்தலங்களுக்குப் போய் வர ஒரு கை குறைந்துவிட்டது என்பதை எண்ணி கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு பதர் பேணி சாப்பிட்டோம்.
//

Keerthi,Its time you got married and you experience the difference..:-)