Sunday, May 04, 2008

I hate MONDAYSஎரிச்சாலான எரிச்சல். சே ! மதாந்தமாக ஜோதிகா போல் மரகதச் சோம்பல் முறித்து எழுந்திருக்கும்போது, அலுவலுக்குச் செல்லவேண்டுமே என்ற அந்தக் கொடூரமான நினைவு வந்து அதிகாலையின் அழகை ரசிக்கவிடாமல் செய்கிறது.

திங்கள்கிழமைகளை ஆரம்பிப்பது என்பது எனக்கு வேண்டா வெறுப்பான விஷயம். ஸ்டார்ட்டிங் ட்ரபிள் தான். உதைத்து ஓட்டினால் கிடு கிடு என வண்டி வெள்ளிக்கிழமை வரை ப்ரச்சனை இல்லாமல் வந்து நிற்கும். இருந்தாலும் இந்த திங்கட்கிழமையின் முதல் சில நாழிகைகளை விழுங்கியாக வேண்டியிருக்கிறதே !

என்னதான் தவசச்சாப்பாடு ருசியாக இருந்தாலும், பாகற்காய் சாம்பார் சாப்பிட்டே ஆகவேண்டும்.

நானும் பல தடவை இந்த மண்டே மார்னிங் ப்ளூஸை ஒழிக்க பல வகைகளை கையாண்டு பார்த்திருக்கிறேன். ஊஹும் !! மாட்டேன் என்று கசந்து தொலைக்கிறது. ! "வேலைக்குச் சென்றால் ஆனந்தமாக, ஓசி ஏசியில் ஈசி சேரில் உட்கார்ந்து கோஸியாக இருக்கலாம்" என்றெல்லாம் சொல்லி மனதை சமாதானப் படுத்தினாலும் "ஐயோ கடவுளே ! சொர்கமே என்றாலும் அது நம்ம வீட்டப் போல வருமா !! தந்தன தந்தன தந்தா !!" என்று இளையராஜா குரலில் மனம் அடம் பிடிக்கிறது.

சில சமயம் உண்மையை, அதன் தீவிரத்தை உணர்ந்த போதும் மனம் அடம்பிடிக்கும். இன்ஸ்டின்க்ட் வின்ஸ் ரீஸன்.

"ஆபீஸ் போனால் வீட்டு வேலை செய்ய வேண்டாம். நாம் நாலு பேரை வேலை வாங்கலா.." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மனம் உடலை அசைத்து கைகளை ஏசுபிரான் சிலுவையில் அறைந்த பாவனையில் தூக்கி சோம்பல் முறித்துக் காண்பிக்கும். ஆஹா ! சோம்பல் முறிப்பது எத்தனை ஆனந்தம். தும்மல் வந்ததும், தும்மி முடித்தவுடன் அப்படியே கண்களை மூடி அனுபவிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ! அப்படி ஓர் சுகம். !!

சே ! சே ! இந்த மனம் என்னை வென்றுவிடும் போல் இருக்கிறதே !! இதைப் போக்க ஒரே வழி.. "டெலி போர்டிங்".. ஞாயிறு இரவு தூங்கச் சென்றால், திங்கள் காலை விழிக்கும் போது ஆபீஸில் இருக்க வேண்டும்.

பள்ளி நாட்களில் திங்கள் கிழமை இதைவிட பாரமாக இருந்திருக்க வேண்டும். துக்கம் தொண்டையை அடைக்க, அழுகை கண்களில் தெரிய பள்ளிக்குச் செல்வேன். இப்பொழுது மெச்சூரிட்டி காரணமாக அழவும் முடியாது (!). ஆனால் இன்றும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஏதாவது காரணத்தினால் இன்றைக்கு லீவ் விட மாட்டார்களா ? ஏதாவது பெரிய பதவியில் இருக்கும் பெரிசுகள் மண்டையைப் போடாதா ? எல்லாமே சரியாய் இருந்து தொலைக்கும். ! சே !!

நீங்கள் எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?

13 comments:

Manki said...

"இதைப் போக்க ஒரே வழி.. "டெலி போர்டிங்".. ஞாயிறு இரவு தூங்கச் சென்றால், திங்கள் காலை விழிக்கும் போது ஆபீஸில் இருக்க வேண்டும்."

இது பிரச்சனையைத் தீர்க்காது கீர்த்தி. ஞாயிற்றுக்கிழமைகள் பூராவும் அப்புறம் சிவராத்திரி ஆயிரும் :(

"நீங்கள் எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?"

எனக்கு திங்கள்கிழமை பெரிய கஷ்டம் இல்லை. சம்பந்தமே இல்லாமல் திடீரென ஒரு செவ்வாய்க்கிழமையோ வியாழக்கிழமையோ மனம் தரையில் விழுந்து அடம்பிடிக்க ஆரம்பித்துவிடும். சமாதானப்படுத்தி கிளம்புறது ரொம்பக் கஷ்டம்!

Shivathmika said...

chance-a illa keerthi,naanum aladha kuraiya office vandhen, unga blog padichadhume sandoshama irukku... i feel the same...

Jeevan said...

Ennathan Saturday sundayvula thoonga time kedaichalum thokam varathu, but mondayna nalla thookam varum aana nearam than kadaikathu.

Uma said...

enakku kuda etho homework pannama bayathula schoolku pora maathiri irukkum keerthi.. Morning elundrikarappo fever adikkuthanu thottu thottu paapen. Roomies kitta solli check panna solluven. ellarum "Monday fever" nu comment kuda pannuvaanga..

Sowmya said...

Ithukku per than "monda(i)y phobia" oo :P

prabukarthik said...

enakku 'sunday afternoon blues' dhaan kodumai! :(

adhey madhiri friday lunch saapita udaney happy agiduven :)

adhayum sollanum la??

Shreekanth said...

Idhukku Naane raaja naane mandhiri irukknum irukkanum namma profession... Namma nanacha time velai nnu irundhaa super a irukkum ...Adhu allavo profession :)

Chakra said...

Work from home on Mondays.
Howzzzat?

Keerthi said...

Manki, ah !! Tuesdays ?? Something fishy about it..

Shivathmika, :) appada !

Jeevan, Unmai-O-Unmai

Uma, exactly.. aaha ! namma jaathi neenga !

Sowmya, "Lunaediesophobia" is actually Fear of Mondays.

PK, friday kadhaye veru !! adhuvallavo sorgam !

Shreekanth, dei.. apadi irundha vera madhiri kashtam. !

Chakra, ungalukku andha baakkiyam irukko ? enakkellam kidayadhu !!

Arunram said...

Really the situation which haunts most of the people like us! But, adding to this, there is one more syndrome in which I see people (including me) postponing all the activities to be done in the weekends and then happily watch movies and sleep in the weekends. :-). Then, Monday morning blue will be at the maximum intensity and it will be solaced by saying "the extra work will definitely be completed this weekend, putting extra time". And, I know what happens. :-)

Sowmya said...

Hi keerthi,

Some techniques to handle this Lunaediesophobia !

•Identifying out automatic thoughts: ie , identifies the mood associated with the thoughts.
•Irrational beliefs that underlie automatic thoughts:
Emotional reasoning: “If I am nervous, then I must be performing terribly.”

All or nothing: Absolute statements that do not admit any partial success of gray areas. “I am a failure unless I make an A.”

Overgeneralization: One unfortunate event becomes evidence that nothing will go well.

Should have thoughts: Insisting that an unchangeable reality must change in order for one to succeed.

Drawing unwarranted conclusions: Making connections between ideas that have no logical connection.

Catastrophizing: Taking a relatively small negative event to illogically drastic hypothetical conclusions.

Personalization: Believing that an event has special negative relationship to oneself.

•Selective negative focus: Only seeing the negative parts of an event and negating any positive ones.

•Challenge negative beliefs: Once the patient and therapist have identified and characterized the negative thoughts, the therapist should help the patient examine the lack of data supporting the beliefs and look for other explanations of what the patient sees.

May be, you have known these things too :)

Ramya harish said...

dhavasa sappaadu, paagarkari. super uvamai.. friday na dress pannika nalla mood irukum.. monday na.. ayoda.. nu edho picha kari madri kelambi poiduven.. aana school days, i wud welcome monday happily eventhough i pray social maam absent a irukanum.. u know there wer times i had not finished my HW., sincerely prayed that teacher shud be absent.. n it has happened.. i used to jump n shout loudly in clas...yehh god s great.. even now i think of those times n thank god..

Swarnarekha said...

Monday power shut down agalanalum paravala!! atleast oru rendu mani neramavathu current cut aganumnu vendikuven..........


ana athu epadiyum palikathu.. irunthalum oru perasai than..