Friday, June 27, 2008

ஓங்கி உலகளந்த உத்தமன்


சில மனிதர்களுடைய பெயர், அவர்தம் பெருமைக்கேற்ப, உலகமெங்கும் விரவி நிற்கும். அவை நல்ல காரணங்களுக்காகவோ, இல்லையோ... அவர்கள் மீது எனக்குத் தனி மரியாதை தோன்றும். காரணம், அவர்கள் எங்கேயோ செய்யும் சில அற்ப செயல்களின் அதிர்வு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனது வீடு வரை வந்து பாதிக்கும். இந்த தலைமுறையை நேரடியாக பாதித்த மனிதர்களில் - ஜார்ஜ் புஷ், பில் க்ளின்டன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சதாம் ஹுசேன், முஷாரப், ஸ்டீவ் ஜாப்ஸ், உசாமா பின் லேடன்.. என்று நெடுந்த்தூரம் பயணிக்கும் ஒரு வரிசையில் அதி முக்கியமான ஒரு மனிதர் - பில் கேட்ஸ். இன்பாக்ட் இந்த தலைமுறையை அடுத்த கியர் போட்டு வேகமாக முன்னேற்றப்பாதையில் செலுத்திய மனிதர் என்று இவரைக் கூறினால் அது மிகையாகாது.

பில் கேட்ஸ் பற்றி விகிபீடியா குறிப்பு இங்கே.

..."மாமு.. பில் கேட்ஸ் நம்மள மாதிரியே ஒழுங்கா படிக்கலயாம்டா... "
..."பில் கேட்ஸ் ஒரு நாள் சம்பளத்துல, நாம ஆறு மாசம் குடும்பத்தை ஓட்டலாம் தெரியுமா ?"
..."பில் கேட்ஸ் உலகத்தின் ஒன்னாம் நம்பர் பணக்காரர் இல்லயாம். பாவம், அவர் இப்போ தர்ட் பொஸிஷன்ல இருக்கார்"
..."என் பையன் கம்ப்யூட்டர்ல பிச்சு உதர்ரான்.. பில் கேட்ஸ் மாதிரி இவனும் பெரிய கம்ப்யூட்டர்காரனா வருவான் பாரு".
..."பில் கேட்ஸ் கம்பெனில 37% நம்ம ஆளுக தான்.. அப்புறம் ஏன் லாபம் வராது ?"

தெரிந்தோ தெரியாமலோ, சரியாகவோ தவறாகவோ பில் கேட்ஸ் என்ற மனிதரின் பெயர் பல்வேறு காரணங்களுடன் அசோசியேட் ஆகி நம்முள் பிரபலமாகிவிட்டார். விவேக் கூட மூன்று படங்களில் இவர் பெயர் குறிப்பிட்டு ஜோக் அடித்ததாக ஞாபகம். பில் கேட்ஸ் தமிழ் மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம்.

ஆனால், எனக்கு இந்த ப்ரபல்யம், செல்வச் செழிப்பு, லினக்ஸ் மக்களின் எரிச்சல் போன்ற விஷயங்களைத் தாண்டி பில் கேட்ஸ் மீது மரியாதை கொள்ள வைத்த விஷயம் - உலகத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றதுதான்.

"No army of the world can stop the power of an Idea, whose time has come" என்று சொல்லுவார்கள். கேட்ஸின் ஐடியா இந்த உலகத்தையே மாற்றியது. Personal Computingன் அர்த்தத்தை Coin செய்தவர் பில் கேட்ஸ். இவர் இல்லையென்றால் நிச்சயமாக வேறு மாதிரி நமக்கு personal computing experience கிடைத்திருக்கும். ஆனால், இவர்தான் இருந்தாரே... அல்லது இவர்தானே இருந்தார்.

Quick and Dirty Operating Systemஐ விலைக்கு வாங்கியது முதல், இன்றைய விஸ்டா வரை ஒரு தலை சிறந்த Businessman ஆகவே இவரைப் பார்க்கிறேன். மென்பொருளோடு அல்லாமல், இன்டெர்நெட் புரட்சியின் முக்கியமான பங்கு மைக்ரோசாஃப்டினுடையது. இரண்டு பட்டன் மவுஸ் மைக்ரோசாஃப்டினாலேதான் வந்தது. (அமெரிக்காவில் பிள்ளை வைத்திருக்கும் இந்திய மாமாக்களுக்கு டபுள் க்ளிக் என்பது ப்ரம்மப் ப்ரயத்தனம். ரைட் க்ளிக் -> ஓப்பன் இருப்பதால்தான் சௌகர்யமாக போட்டோ பார்க்கிறார்கள்).

1990ல் ஆரம்பித்த Windows சாதனை, இன்று வரை தொடர்கிறது. GUI மெருகேற்றி மக்களுக்கு இலகுவாகப் புரியும்படியும், பயன்படும்படியும் 1995ல் வந்த Windows 95 ஒரு Phenomenon. இதன் பின்னனியில் பல மென்பொருள் வல்லுனர்கள் இருந்தாலும், மைக்ரோஸாஃப்ட்டின் மேலே அமர்ந்து வழி நடத்தியவர் பில் கேட்ஸ். இவரது aggressive marketing strategies உலகம் அறிந்த ஒன்று. பல பேர் இவர் மீது monopoly groundsல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு dominate செய்ய ஆரம்பித்தார். அந்த aggressiveness இல்லையென்றால், இவ்வளவு சீக்கிரம் இந்தியாவின் பட்டிதொட்டிவரை கம்ப்யூட்டர் சென்று அமர்ந்து இருக்காது.

சிகரம் தொட்டு மைக்ரொசாஃப்ட் வளர்ந்ததன் பின்னனியில் கூடவே இருந்தார் பில் கேட்ஸ்.

என்னதான் லினக்ஸ்/யூனிக்ஸ் மக்கள் மைக்ரோசாப்டை வைதாலும், சாமான்யர்கள் வீட்டில் உபயோகப்படுவது Windows தான். Open Source / free / user-friendly என்று எதைச்சொன்னாலும், இன்னும் பெரும்பாலான மக்கள் Windowsஐயே விரும்புகிறார்கள். இந்தியாவில் Windowsம் இலவசம்தானே :)

இப்படி, நம் வீடு வரை penetrate செய்துள்ள ஒரு நிறுவனத்தின் மூலகாரணமான வில்லியம் ஹென்றி கேட்ஸ் - பில் கேட்ஸ், நேற்று ரிட்டையர் ஆனார். நேற்று வரை இவரது மொத்த stake $ 23 பில்லியன். என் கம்பெனியை இவர் இடது கையால் வாங்கலாம்.

இனிமேல் தனது பில் & மெலின்டா பவுண்டேஷனுக்காக உழைக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பு ஒரு தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் கல்வி, ஆரோக்யம் ஆகியவற்றிர்க்கு முக்கியத்துவம் அளித்து அதற்கேற்ப தொண்டு செய்யும் நிறுவனம்.

மைக்ரோசாப்டின் தற்போதைய CEO ஸ்டீவ் பால்மர் நேற்று farewell partyல் சொன்னது..
Ballmer also talked about how he had contemplated leaving Microsoft just a month after joining the company, only to have Gates persuade him to stay by saying "You don't get it. You don't get it. We are going to put a computer on every desk and in every home." Say what you will about some of his predicitions, but he was sure on the mark with that one.
ஒவ்வொரு வீட்டின் மேஜையிலும் ஒரு கம்ப்யூட்டர் என்பது கேட்ஸின் கனவு. நிஜமாகிக்கொண்டு வருகிறது.

8 comments:

Manki said...

"அந்த aggressiveness இல்லையென்றால், இவ்வளவு சீக்கிரம் இந்தியாவின் பட்டிதொட்டிவரை கம்ப்யூட்டர் சென்று அமர்ந்து இருக்காது."

தயவுசெய்து இப்படி எளிமைப் படுத்துவதை நிறுத்துங்கள். "கம்ப்யூட்டர் படிச்சா ஆயிரக்கணக்கா சம்பாதிக்கலாம்" என்ற ஆசை மட்டுமே கொண்டு அரைகுறையாகப் படித்து இன்று குப்பை கொட்டிக் கொண்டிருப்பவர்களது சொந்த நோக்கம் காரணமே இல்லையா? பைரசி பற்றிய அறியாமையில் மூழ்கிக் கிடந்த நம் சட்டம் காரணமே இல்லையா? விலை குறைந்துகொண்டே வரும் ஹார்ட்வேர் காரணமே இல்லையா?

"ஆனால், எனக்கு இந்த ப்ரபல்யம், செல்வச் செழிப்பு, லினக்ஸ் மக்களின் எரிச்சல் போன்ற விஷயங்களைத் தாண்டி பில் கேட்ஸ் மீது மரியாதை கொள்ள வைத்த விஷயம் - உலகத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றதுதான்."

லினக்ஸ் மக்கள் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, உண்மையாகவே லினக்ஸ் மட்டுமே உபயோகப்பிவர்கள் விண்டோஸை வெறுப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு விண்டோஸை விட லினக்ஸ் பிடித்திருக்கிறது, அவ்வளவுதான். என்னால் இனி விண்டோஸில் வேலை பார்ப்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. என்னிடம் விண்டோஸா லினக்ஸா என்று அறிவுரை கேட்பவர்களை விண்டோஸ் உபயோகப் படுத்தும்படியே அறிவுறுத்துகிறேன்.

உலகத்தையே மைக்ரோசாப்ட் வழிநடத்தியது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்வதற்கும் கூழைக்கும்பிடுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று தெரியவில்லை. மைக்ரோசாப்ட்டின் ஐடியாக்களை மற்ற கம்பெனி/ப்ராடக்ட்டுகள் பயன்படுத்தின என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மைக்ரோசாப்ட் பயன்படுத்திக்கொண்ட மற்ற கம்பெனிகளின் ஐடியாக்களும் ஏகப்பட்டவை உண்டு. .Net-கும் Java-கும் என்ன பெரிய வித்தியாசம்? IE 7, Vista போன்றவற்றில் எத்தனை புதிய features அவர்களே சொந்தமாக சிந்தித்து அறிமுகப் படுத்தியது? ஐடியாக்களைக் காப்பி அடிப்பதை நான் தவறென்று சொல்லவில்லை -- ஒரேயடியாக ஒரு கம்பெனிக்கு மட்டும் ஐடியாவுக்கான அங்கீகாரம் கொடுக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

"மென்பொருளோடு அல்லாமல், இன்டெர்நெட் புரட்சியின் முக்கியமான பங்கு மைக்ரோசாஃப்டினுடையது."

Internet Explorer, live.com, Yahoo-வை கபளீகரம் செய்ய முனைந்தது பற்றியெல்லாம் தானே சொல்கிறீர்கள்? வாஸ்தவம் தான். "முக்கியமான" பங்கு இருக்கிறது அவர்களுக்கு (pun intended).

Keerthi said...

Manki, First sentence "இவ்வளவு சீக்கிரம்..".

அப்புறம், லினக்ஸ் மக்களின் எரிச்சல் என்று லினக்ஸ் பயன்படுத்திக்கொண்டு மைக்ரோசாப்டின் மீது எரிச்சல் கொண்டவர்களை "லினக்ஸ் மக்களின் எரிச்சல்" என்று குறிப்பிட்டுள்ளேன். எந்த எரிச்சல் நியாயமற்றது என்பது என் கருத்தல்ல. ஆனால், அந்த எரிச்சலையும் தாண்டி மைக்ரோசாஃப்டின் மீது மரியாதை வந்த காரணங்களை எழுதியிருக்கிறேன்.

கூழைக்கும்பிடு ?? What the heck ?? உலகத்தின் பாதையை திசைதிருப்பியதில் முக்கியமான பங்கு மைக்ரோசாஃப்டினுடையது. You may choose to deny that, but thats a hard fact. ஐடியா - Personal computing experience இன்று இத்தனை சௌகர்யமாக இருப்பதற்கு, மைக்ரோசாஃப்ட் பிற கம்பெனிகளின் ப்ராடக்ட்களை இணைத்தது தான். திருடவில்லை. யாருடைய மதிப்பையும் இங்கே குறைத்து மதிப்பிடவில்லை. பில் கேட்ஸின் பிசினஸ் ஸ்ட்ராடஜிக்களைப் புகழ்ந்திருக்கிறேன். ஒரேயடியாக ஒரு கம்பெனிக்கென்று அங்கீகாரம் எதுவும் வழங்கவில்லை.

பயன்படுத்த எளிமையானதால்தான், மக்கள் கம்ப்யூட்டர் வாங்க ஆரம்பித்தனர். அதனால்தான் ஹார்ட்வேர் விலை குறைந்தது. Windows plays a pivotal role here. Wonder if you would deny that. There may be a thousand other reasons. பைரசி இருக்கட்டுமையா.. ஃப்ரீயாகக் கிடைத்தாலும் பல ஆப்பரேடிங் சிஸ்டங்கள் இன்னும் முன்னுக்கு வரவில்லை (in personal computing arena).

சொந்த சரக்கு.. I wouldnt want to say Microsoft has been innovative with its own features. I agree they have been integrating a lot other softwares. But remember, Otto Frederick Rohwedder - why did this guy get famous. He didnt invent the bread.. nor the knife. He just knew a need and addressed it. May be you wouldnt call it an innovation. I would.

And regarding the last line pun (!), Are you denying that Microsoft hasnt played a important part in the internet revolution.

Would like to hear that from you.

Manki said...

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று நம் ஊரில் சொல்வார்கள். என்னைக் கேட்டால் மைக்ரோசாப்ட்டும் அதுபோலத்தான். They knew the market -- I am not denying it. They were cunning in several instances -- I can't comment on that 'cause I hardly understand business and marketing.

எனக்குத் தெரிந்தவரை இண்டர்நெட் விஷயத்தில் அவர்கள் செய்த நல்ல காரியம் XMLHTTPRequest object-ஐ அறிமுகம் செய்தது. (அதை Gmail-கு முன் யாருமே உபயோகப் படுத்தவில்லை என்பது வேறு விஷயம்.) ஊரில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் படித்துப் பாருங்கள். மைக்ரோசாப்ட் எப்போதுமே அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு (standards) ஒத்துப்போனதே இல்லை. (JScript என்றால் என்ன தெரியுமா? IE-ல் JavaScript-ன் பெயர் JScript. JavaScript-கும் JScript-கும் இடையே சிறிய வேறுபாடுகள் உண்டு.) Web developer-களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்கள் எந்த அளவுக்கு IE-ஐ வெறுக்கிறார்கள் என்று. இதெல்லாம் மைக்ரோசாப்ட் ஏதோ நல்ல எண்ணத்தில் செய்தது என்றோ, IE இலவசமாக வினியோகம் செய்யப்படுவதால் அதில் குறை காண்பது தவறு என்றோ நீங்கள் நினைத்தால் அதற்குமேல் நான் சொல்வதற்கு ஏதுமில்லை - நான் உங்களோடு உடன்படவில்லை என்பதைத்தவிர.

"அந்த aggressiveness இல்லையென்றால், இவ்வளவு சீக்கிரம் இந்தியாவின் பட்டிதொட்டிவரை கம்ப்யூட்டர் சென்று அமர்ந்து இருக்காது" என்று நீங்கள் சொல்வது மைக்ரோசாப்ட்டை அளவுக்கதிகமாகப் புகழ்வது தான் என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவில் அரசாங்கமும், தொழிலதிபர்களும், மக்களும் கம்ப்யூட்டர் புரட்சியை வரவேற்கும் நிலையில் இருந்தது ஒரு பொருட்டே இல்லை என்பது மாதிரி எழுதுவது நியாயமாகாது என்பது என் கருத்து. நம்மால் எளிதாக ஆங்கிலம் எழுத/படிக்க முடிவதற்கு பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் ஒரு காரணம் என்று நீங்கள் கருதுவீர்களேயானால் ஆங்கில அரசின் காலனி ஆட்சி இல்லாமல் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கம்ப்யூட்டர் வந்திருக்காது.

கம்ப்யூட்டர் மட்டுமல்ல, எல்லாத்துறையிலுமே ஒருவரது அல்லது ஒரு நிறுவனத்தின் சாதனை அவர்களுக்கு முந்தையவர்களது சாதனையைச் சார்ந்தே அமைவது தான். ஐபிஎம் என்ற கம்பெனி வரலாற்றில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். மைக்ரோசாப்ட்டோ அல்லது வேறு ஒரு கம்பெனியோ இப்படி ஒரு சாதனை செய்திருக்க முடியுமா? (ஒரு எடுத்துக்காட்டாகத்தான் ஐபிஎம் பெயரைச் சொல்கிறேன். ஐபிஎம் இன்றி கம்ப்யூட்டரே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை.)

உங்களுடைய பதிவில் இருக்கும் "பில்கேட்ஸ் ஒரு உத்தமர்", "அவர் உலகை வழிநடத்தாவிட்டால் நாமெல்லாம் இன்னமும் மாடுமேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்" என்ற தொனியைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது நிற்க.

http://thoughtsintamil.blogspot.com/2008/06/blog-post_3103.html -- இதே பில்கேட்ஸின் ரிட்டையர்மெண்ட் பற்றி வேறொருவரது கருத்து. அதையும் படித்துப் பாருங்கள், ஆர்வமிருந்தால்.

Keerthi said...

Manki, They knew the market. You are exactly right. They partly created this market, in fact.

>>ஊரில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் படித்துப் பாருங்கள்.

- சரி.

>> இந்தியாவில் அரசாங்கமும், தொழிலதிபர்களும், மக்களும் கம்ப்யூட்டர் புரட்சியை வரவேற்கும் நிலையில் இருந்தது ஒரு பொருட்டே இல்லை என்பது மாதிரி எழுதுவது நியாயமாகாது என்பது என் கருத்து.

- கூகிளும், கலைஞரும், ஜெயலலிதாவும், நாரயணமூர்த்தியும், அசிம் ப்ரேம்ஜியும் முட்டாள்கள் என்று குறிப்பிட்டிருந்தேனே.. அதை விட்டுவிட்டீர்களே !

>> "அவர் உலகை வழிநடத்தாவிட்டால் நாமெல்லாம் இன்னமும் மாடுமேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்"

Thats wierd, but an interesting thought. :)

prabukarthik said...

manki solra alvukku ellam enakku matter theriyadhu.... aana high level la bill G is more of aascar ravichandran and less of kamal haasan ... my 2 cents.

Ravi said...

Keerthi, for once I could not agree with your views. I fully agree with what Manki has put forth. Bill Gates was a cunning business man. Look at all his products. Was anything of his own innovation. Everything was copied or redesigned from another application. And as Manki rightly pointed out, he made applications and hardware adhere to his standard rather than the other way round. So please try to look beyond the horizon. I will never accept Bill Gates as a great man - NEVER!

Keerthi said...

PK, he could be. But, would you agree that he has made a deep impact over the society ?

Ravi, answer previous comment.

Ravi said...

Keerthi, impact agreed but at what cost? It was pure business for him. Remember how most softwares of his come as a free ware or patches but later you have to keep paying some maintenance or upgrade fee just to ensure that your system keeps workings else something would pop up out of the blue and that's it.

As I said earlier, he even brought a new standardisation - Microsoft standards - how ethical is that? And the windows look and feel, usage of mouse was outright copied from Apple.

Unlike many inventors of the past, he did not come up with something to help mankind but was pure business for his own benefit. Infact I remember reading that even APJ opposed to accept Microsoft's so called charity offer of having Windows systems in government schools.

And he also included as many people as he could in his business fray like for example, Intel. You needed to have the altest processor for certain applications.

Ippo senja paavathukku ellaam parihaaram maadhiri dhaan ippo charity-nu solikiraaru? Ivaru vayathula adichu gaali pannina companies eraalam, adhukku ivaru seyyara oru miga miga chinna parihaaram dhaan "charity".