Thursday, July 03, 2008

கும்பகோணம்

DSC07358

Nandi(s)

Outside Kanchanoor Temple - Kumbakonam, TN. India

திகட்டத் திகட்ட கும்பகோணம் சுற்றியாயிற்று.
எப்பொழுதும் போல சொந்த ஊரான மாயவரம் செல்லாமல், இந்த தடவை நேராக கும்பகோணம் சென்று அங்கேயே வட்டமடித்தோம்.

எத்தனை கோயில்கள், எத்தனை வரலாறு, எத்தனை ஐதீகங்கள். ஒரு சாமியிடம் ஒரு குறை என்ற கணக்கில் மனுக்களை ஒப்படைத்துக்கொண்டே வந்தால், ஐந்தாம் பிரகாரம் சுற்றும்போது குறையொன்றுமில்லை.

உப்பிலியப்பன் கோயிலில் அபிஷேகம் செய்தோம். அப்பப்பா !! காணக் கண் கோடி வேண்டும். அப்படியொரு திருமஞ்சனம் என் வாழ்வில் பார்த்ததேயில்லை.

மேலே காணும் கோபுரம் திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலினுடையது. ப்ரம்மாண்டமான கோயில். சிற்பங்கள், பிரகார வடிவமைப்பு, ஸ்தல வரலாறு என்று அத்தனை விஷயங்களிலும் வெரி வெரி இன்ட்ரெஸ்டிங்.

பெரிய கோயில்கள் அத்தனையிலும் யானை ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள் தேஜா. தேஜா ஒவ்வொரு சாமியிடம் இப்படி வேண்டிக்கொண்டாள். "ம்மாச்சி காப்பாத்து.. ம்மா காப்பாத்து. அப்பா காப்பாத்து.. பாட்டி காப்பாத்து.. தாத்தா காப்பாத்து..அம்மம்மா காப்பாத்து.. மணி தாத்தா காப்பாத்து.. கீத்தி மாமா காப்பாத்து.. தேஜா காப்பாத்து... திட்டாதே...".. ஏன் திட்டாதே என்று சொன்னாள் தெரியவில்லை.

கும்பகோணத்தில் எட்டணாவுக்கு எண்ணை வாங்க முடிகிறது.
ரோடுகள் சென்னையை விட படு மோசமாக இருக்கிறது.

அதி முக்கியமாக அபாரமான சாப்பாடு என்று மெய்ன் சிட்டியில் எங்குமே இல்லை. கும்பகோணம் டிகிரி காப்பி கடைகளில் கிடைக்காதோ ?? அங்கே சென்ற உறவினர் வீட்டில் மட்டும் தான் நல்ல காப்பி கிடைத்தது. யாராவது நல்ல ஹோட்டல் பேர் சொல்லுங்களேன். "அர்ச்சனா, வெங்கட்ரமனா" தவிர. இரண்டுமே கூட சுமார்தான். கௌரிஷங்கர் ?

6 comments:

Anonymous said...

Have u tried in Food in murugan tiffin center. I have tasted onion rava and kadapa on a sunday morning. It tasted very good.

Arun

Chakra said...

என் பெயர் கொண்ட உம்மாச்சி கோவிலுக்கு போனியா இல்லையா?

Anonymous said...

chennai road a thavira mattra ella oorgalilum road romba mosamthan....

Kannan said...

Keerthi

Upilliappan koilukku edhirtha maadhiryae oru mess irukku.. saapaadu homelya irukkum..my favourite. By the way saapittutu elaya naamadhaan eduthu podanum.

By the way..Mr uppili is our family diety.

Keerthi said...

Arun, Where is it in Kumbakonam ? Is that the one in the railway station??

Chakra, of course. :) Avarum ungalai Romba visaarichadha sonnaar.

Anon, Went to Neyveli yesterday. Cuddlore, Neyveli, Pondy is all good. Kumbakonam roads are horrible.

Kannan, :)...

izmir evden eve said...

thank you for sharing
desstek@evdeneve-nakliyat-name.tr