Friday, July 25, 2008

பரமானந்தம் !

மு.கு - சென்ற "சத் சித் ஆனந்தம்" பதிவிற்கும் இந்த "பரமானந்தம்" பதிவிற்கும் சம்பந்தம் இல்லை.

(இந்த அரசின் சாதனைகளை பட்டியலிட்டுவிட்டு) [...] பெருமகிழ்ச்சி என்று சொல்லிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பிராமணர்கள் கூறுவதைப் போல பரமானந்தம் அடைகிறேன் என்றும் கூறிக்கொள்கிறேன்

- கலைஞர் கருணாநிதி


வேடிக்கையாக இருக்கிறது. பிராமணர்கள் மட்டும் பரமானந்தம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்களா ? அல்லது பிராமணர்கள் பரமானந்தம் அடைகிறார்களா ? என்ன சொல்ல வருகிறார் முதல்வர் ? சரி பிராமணர்கள் பயன்படுத்துவதை ஏன் அங்கே சம்பந்தாசம்பந்தமில்லாமல் குறிப்பிட வேண்டும் ??

இன்ஃபாக்ட், நான் பார்த்த வரையில் பரமானந்தம் என்ற வார்த்தை, தமிழ் கிறிஸ்துவ போதனைகளில்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். பிராமணர்கள் Superlative வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது ஐயங்கார்கள் "திவ்யமா இருந்தது" என்றும் ஐயர்கள் "ஃபர்ட் க்ளாஸா இருந்தது" என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பரமானந்தம் ரொம்ப ரேர்தான். அப்படியிருந்தும் ஏன் கலைஞர் அப்படிச் சொன்னார் ? யதேச்சையாக "நான் பரமானந்தம் அடைகிறேன்" என்று சொன்னால் அது எங்கே இந்துத்துவத்துடன் தன்னை இணைத்துவிடுமோ என்று அர்த்தமில்லாமல் பயந்திருப்பாரோ ?

பரம + ஆனந்தம். பரம ரசிகன், பரம வைரி, பரம திருப்தி, பரம சந்தோஷம் (இது பிராமணர்கள் அதிகம் பயன்படுத்துவது, உண்மை) என்ற வரிசையில் பரம ஆனந்தம் = பரமானந்தம். அவ்யுக்தா வாசகர்களுக்கு ஒரு கேள்வி. இந்த "பரம்"/ "பரம" என்றால் என்ன ? சொல்லுங்கள் பார்ப்போம்.

On a different note, இப்படிப்பட்ட வார்த்தைகள் பல வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. வெகுசில எழுத்தாளர்கள் மட்டுமே மிகுந்த ப்ரயாசையுடன் அந்தந்த உணர்ச்சிகளுக்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பாக்கி மக்கள் எல்லாம் அந்தந்த சமயத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளை சொற்றொடர்களில் சொருகிவிடுவர். அதிகப்படியான சந்தோஷத்தை விபரிக்கும் வார்த்தைகளை நாம் தமிழ் பயன்பாட்டிலிருந்து அனேகமாக அகற்றிவிட்டோம் என்றே தோன்றுகிறது.

"அந்த டைரக்டர் பின்னிட்டான்யா !!" என்று சொன்னால் அந்த டைரக்டர் அபாரமாக இயக்கியிருக்கிறார் என்று அர்த்தம் - நாம் கொள்ள வேண்டும்.

என்னுடைய தலைமுறையினர் ஒப்புமையில்லா நிலையைக் (superlative) குறிக்க ரொம்பவே சிரமப்படுவது கண்கூடாகத் தெரியும். "ச்சான்ஸே இல்ல.. சூப்பரா இருந்துச்சி !" என்று எல்லாவற்றிர்க்கும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் என்ன சொல்லுவதென்றே தெரியாமல், "Fantabulous" என்று கலந்து கட்டி ஒரு வார்த்தையை உருவாக்கிவிட்டனர். என் டீமில் ஒருவர் அடிக்கடி எல்லாவற்றிர்க்கும் "extreeme !!" என்று அடைமொழி தருவார். இப்படிப் புரைந்தோடி அடிக்கடி சொல்வதால் உப்புபெறாத விஷயங்கள் எல்லாம் "out of the world experience" ஆக உருவகப்படுகின்றன.

இதற்குக் காரணம் நிறைய சந்தோஷத் தருணங்களை நாம் எதிர்கொள்வதால் இருக்கலாம். அல்லது பல சாதாரனமான தருணங்களை சந்தோஷமாக பாவித்துக் கொண்டிருப்பதாலும் இருக்கலாம். அல்லது நிறைய மக்கள் feedback கேட்க ஆரம்பித்ததால் இருக்கலாம். ஏதோ சில காரணங்களால் நாம் இப்படி அடிக்கடி சொல்வதால், அடிக்கடி நாம் சூப்பர்லேட்டிவ்வான அனுபவங்களை சந்திப்பதாக அர்த்தமாகின்றது. வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்களை இழக்கத் தொடங்கியிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. பல பேர் இதனால்தான் analogy அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஹ்ம்ம்.. எப்படியோ.. கலைஞர் போன்ற செலிப்ரிட்டிகள் இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பதால் வெட்டியாக ஒரு யோசனையைப் போட்டு காலம் கடத்திக்கொண்டிருக்கிறேன். அல்லது வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அல்லது பிராமணர்கள் சொல்வது போல நேரத்தை உழற்றிக்கொண்டிருக்கிறேன்.

(அது எப்படி "உழற்றிக்கொண்டிருக்கிறேன்" என்ற வார்த்தை பிராமண வார்த்தை ஆனது ? என்று என்னை நீங்கள் கேள்வி கேட்க முடியாது ).

3 comments:

expertdabbler said...

machi..ivan idea paaren NAASAM!!!

is a popular superlative among designers :)

Narayanan Venkitu said...

kallaraiyilum karuna...brahmanarkalai..marakka maattar.

Life partner 1 or 2 ...Brahmanargal ahche...illiyah?

Keerthi said...

பிகே, நாசம்... !! LOL

வெங்கிட்டு சார், i think he knows most of our rituals and customs, than we do.. what say ? LOL