Monday, July 28, 2008

இன்ன பிற

அவ்யுக்தாவின் நெடு நாள் வாசகர் ஒருவர், அவ்யுக்தா வாசித்து முடித்தபின் தனக்கு மைக்ரெய்ன் தலைவலி வருவதாகச் செய்தி அனுப்பியிருந்தார். சரி ! தெரிந்தது தானே என்று மேலும் படித்தால், அது அவ்யுக்தாவின் பதிவுகளால் இல்லை.. அதன் கறுப்பு நிற பேக்ரவுண்டினால் என்றும் சொல்லியிருந்தார். அதனால் தான் இந்த மாற்றம்.

----

பெங்களூர் மற்றும் அஹமதாபாத் குண்டு வெடிப்புகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? ஒருவேளை அதன் நோக்கம் வேறாக இருக்கலாம். "நாங்கள் கண்டனம் தெரிவித்து விட்டோம்... ஆகவே அந்த குண்டு வெடிப்பிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. ஓகேவா ?" என்று குறிப்பிடுவதற்காக இருக்கலாம். விழுந்தடித்துக்கொண்டு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது கூட இதற்காக இருக்கலாம்.

என்னதான் Low-intensity bombing என்று சப்பை கட்டு கட்டினாலும், உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. பயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆபிஸில் நுழையும்போது, தினம் சல்யூட் அடித்து சிரித்துக்கொண்டே குட்மார்னிங் சொல்லும் செக்யூரிட்டி.. "சார்.. பேக் ப்ளீஸ்" என்று ஃப்ரிஸ்க்குகிறார். காணும் இடங்களிலெல்லாம் காவல் அதிகாரிகள் தென்படுகின்றனர். சென்னை பரபரப்பாகவும் கொஞ்சம் பயமுகத்துடனும் இருக்கிறது. செய்திகளில் காண்கையில் கேரளாவும் மிகுந்த பதட்டத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

கூகிள் ரீடரில் ஐபின் லைவ் ஃபீடுகளை செக் செய்வதற்கே பயமாக இருக்கிறது. அடுத்த செய்தி என்னவாக இருக்குமோ என்று. இதற்கிடையில் தமிழக காவல்துறை "எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புபவர்களை தண்டிப்பதாக" அனைவருக்கும் மெஸேஜ் அனுப்பியுள்ளது. இது கொஞ்சம் வதந்தி பரவுவதைத் தவிர்க்கும். நல்லது.

எங்கேயோ எவனோ தயாரிக்கும் கொள்கைகளுக்காக ஒரு அப்பாவி உயிர் பலியாகும் மடத்தனம், கொடுமையானது. On a second thought, இவர்களுக்கு கொள்கை மண்ணாங்கட்டி எதுவும் இல்லை. They just want the city burning. வெறித்தனம்.

சீக்கிரம் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
------

8 comments:

Shivathmika said...

yes keerthi..ivangala koondoda azhikanum.. innocents should not be killed..

Srini said...

Going by the title of this post, I'm guessing that long time reader as Lazygeek !! My mistakes if it's wrong :) After watching Dasavatharam I'm beggining to connect things these way !!

BTW, I liked black better :) I would always visit your site rather than feed reeding it just because of your themes.

On topic, terror at chennai is at all time high. If a bike or car is parked overnight in our office, without informing admin, it would be handed over to police !! Bayama irukku...

Arun said...

Actually Batman was wrong..Almost all people are ugly deep down...

கொள்கை என்ப‌து கொலை செய்வ‌த‌ற்க்கு ஒரு சாக்கு...ஆழ்ம‌ன‌தின் வ‌க்ர‌/விப‌ரீத‌ங்க‌ளை வெளி கொண‌ர‌ ம‌னித‌ன் சொல்லும் ச‌மாதான‌ம்.

"All you need is a push"...

Nothing can be done about it... said...

If a usual reader of your blog is fed-up with you blog ?

Will you stop writing avyukta ?

Naama sila samayam kovathula ellathayum vittu eriyardhu illaya yaaru melayo irukkara kovathula.. andha madhiri may be they are fed up (high level)

Keerthi said...

Shivathmika, yes.

Srini, you are right. Dasavatharam is making you think that way. But it is not lazygeek. I liked black too. But its not only this person, but many have requested me to change to a non-black theme. But dont worry, the themes are coming. Where do you work, by the way ?

Arun, "They just want the city burn" - Batman dialogue dhaan.

Anon, if a reader is fed up of avyukta he is free to quit reading. just that this reader got migraine, but still couldn't resist reading my blog.

raj said...

well, thanks for changing to white. Do you know that I stopped visiting your site, inspite of the fact that I always liked the contents, because of that migraine-inducing black background?
I visited recently because couldnt resist reading your views on Dasavatharam. A pleasant surprise today. You will get more hits now - atleast from me!

Arjuna said...

Thank u so much Keerthi :) -- I culd c that black has caused its effect on others too :)..

Keerthi said...

Raj, :) Thanks for coming back.

Arjuna, thanks for that message!