
இனிமேல் புதிதாக கேஸ் கனெக்ஷன் எடுக்க முடியாது போலுள்ளது. (இங்கே படிக்கவும்) ஜாக்கிரதையாக சமைக்கவும். சிக்கனமாகவும் சமைக்கவும். எலக்ட்ரிக் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோவேவ் போன்றவற்றை வாங்க ஆரம்பித்து அதில் சமைத்துப் பழக வேண்டும். பச்சையாக காய்கறி சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.
குண்டு கத்திரிக்காய் தொகையல் செய்ய கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து அதில் கத்திரிக்காயை அப்படியே பற்ற வைப்பவர்கள் கைது செய்யப்படலாம். ஒன்றையணா அப்பளத்தை கிடைத்தற்கரிய கேஸ் ஸ்டவ்வில் சுடுபவர்கள் நாடு கடத்தப்படலாம்.
மருமகளிடம் நீங்கள் ஜபர்தஸ்தாக "ஒழுங்கா எனக்கு பணிவிடை செய். இல்லேன்னா நான் என்னோட கேஸ் ஸ்டவ்வை, அனாதை ஆஸ்ரமத்துக்கு எழுதி வைக்கப் போறேன்" என்று சொல்லிப்பாருங்கள்.. முக்கியமாக, உயில் எழுதும் போது உங்கள் கேஸ் கனெக்ஷனை யாருக்கு விட்டுச் செல்கிறீர்கள் என்று குறிப்பிடவும். இல்லையென்றால் பெரும் கலவரத்தை உருவாக்கிச் செல்கிறீர்கள்.
No comments:
Post a Comment