Wednesday, August 06, 2008

ஓட்டை இல்லாக் காதுகள்


இந்தத் திரையில் இந்தியக் கொடியை கொண்டு வருவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது.. போட்டோஷாப்பில்.

இந்தியாவில் வருகிறது - ஐஃபோன் ! ஆகஸ்ட் 22ல் இருந்து.
---------

ஐஃபோன் - ஆப்பிள் நிறுவனத்தின் புத்திசாலித்தனமான ஒரு தயாரிப்பு.

இந்தியாவில் அனேக மக்கள், தங்கள் மொபைலை ரேடியோ கேட்க பயன்படுத்துகிறார்கள். அல்லது எம்.பி.3 பாடல்களை பதிவு செய்து, தங்கள் காதுகளில் ஒலிபரப்பிக்கொள்கிறார்கள். சில பேர் ரயிலில் செல்கையில், ஸ்பீக்கரில் போட்டு அலறவிடுகிறார்கள். குறிப்பாக கொரியன் மொபைல் போன்கள், ஐயாயிரம் ரூபாயில் அடித்தொண்டையில் பீறிட்டுக்கொண்டு அலறுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் போனின் மெமரி (அதாவது பதிவு செய்யும் கொள்ளளவு), அதிகமாகிக் கொண்டே வருகிறது. 64 MB, 128 MB போன்றவற்றின் காலம் காலாவதியாகி இப்பொழுது 8 GB வரை வந்து நிற்கிறது. செல்லுலர் போனில் 8 GB க்கு அப்படி என்ன தேவை ? என் மாமா சொல்லுவார் "Space attracts junk" என்று. அதே போல, கம்ப்யூட்டரில் இருக்கும் குப்பையை இடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் போனிலும் நிறப்ப ஆரம்பித்தாயிற்று. முக்கியமாக பாடல்கள். ஒரு 8 GB ஐ வைத்துக்கொண்டு அரை மணி நேரத்திற்கு நான்கு பாடல் என்ற ரீதியில், பத்து நாட்கள் விடாது ஒலிக்கச் செய்யலாம். பழைய இளையராஜா முதல் இன்றைய ஜேம்ஸ் வசந்த் வரை அனைவரையும் நுழைத்து தங்கள் காதுகளுக்குள் இசையமைக்கச் செய்துகொண்டிருக்கின்றனர்.

கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் போன், ஒரு எம்.பி.3 ப்ளேயருக்கான முழு அம்சங்களையும் நெருங்கிக்கொண்டிருந்த வேளை.

பார்த்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருந்த ஐபாட் (iPod) என்னும் எம்.பி.3 ப்ளேயரை தூக்கி போனுக்குள் சொருகிவிட்டார். மாற்றியும் சொல்லலாம், போனைத் தூக்கி ஐபாடுக்குள் சொருகிவிட்டார் என்று. எப்படியாக இருந்தாலும் இந்த புது அவதாரமான பெரிய பரபரப்பை உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய 3G போன்களை அறிமுகம் செய்வதற்கு முன் இருந்த AT & T கனெக்ஷனுடன் கூடிய ஐபோன்கள் சொதப்பலான முடிவை சந்தித்தன. நல்லவேளையாக 3G அந்த சொதப்பலைச் சரிசெய்திருக்கிறது.

இந்தியாவிலும் இதற்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது.

--- to be contd.

Update :

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனமும் வோடாஃபோன் நிறுவனமும் இந்த ஐஃபோனை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலும் இன்ன சில நாடுகளிலும் உள்ள சப்சிடைஸ்ட் ரேட் இங்கேயும் இருக்குமா என்பது சந்தேகம்தான். தோராயமாக இதன் விலை பதினாறிலிருந்து இருபத்தையாயிரத்துக்குள் இருக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் இங்கே கொஞ்சம் கஷ்டம்தான். அடுத்த வாரத்திற்குள் அனேகமாக விலையின் விபரம் வந்துவிடும்

ஐஃபோன் 3G நமக்கு எப்படி உபயோகப்படுகின்றது என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

5 comments:

Arun J said...

Fridge potti, A/C potti irukkara phone edhaavadhu sollunga, summer kolludhu :D

Shobana said...

Peethi kelappara maathiree expensive aa illa irrukkum? Did u read about how people with long nails couldn't use it though, since the phone required touching with the finger tips and not nails? Another reason to cut those nails off...

Keerthi said...

Arun J,
http://avyukta.blogspot.com/2007/11/blog-post_30.html

Shobana, I think the price should be within 25K (which is that of the high end models here). Anything above, will make life difficult for apple.in .And Nails, LOL. thats a real problem.

kundalakesi said...

Subsidized rate-a? Inga connection-oda freeya handset nu irukkura nelamaila, $ 199 rombave jaasthi.

Kadaisiya kidaiththa thagaval: 8 gig model vilai Rs. 27000.

Anand Natarajan said...

Hi,

I saw in NTDV they said it will be around Rs.20K. But compared to the prices selling in Dubai,it is very very cheap...I Dubai Iphone price is AED 8750/-(Almost 1 lac)..