Saturday, September 06, 2008

அரிதார ராஜ்யம்

UPDATEWhaddya think ?
-----


சிரஞ்சீவி "ப்ரஜா ராஜ்யம்" கட்சி ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே. என் டீமில் இருக்கும் அனைத்து தெலுகு மக்கள் அனைவரும், இவர்தான் அடுத்த சி.எம். என்று கம்ப்யூட்டர் மேல் அடித்து சொல்கிறார்கள் (இவர்களில் யாரும் வோட்டு போட ஊருக்குச் செல்லப்போவது இல்லை). பத்திரிக்கை ஊடகங்களும், என்.டி.ஆரை மிஞ்சும் ரெக்கார்டாக கட்சி ஆரம்பித்த ஒன்பது மாதங்களில் முதலமைச்சர் ஆவார் சிரஞ்சீவி என்று ஊகிக்கின்றன.

எனக்கு இந்த ஹைப், பரபரப்பு, பதட்டம், கொந்தளிப்பு, கான்ஸ்பிரசி, கான்ட்ரவர்ஸி போன்றவை எல்லாம் ரொம்ப பிடிக்கும் (என்னை நேரடியாக பாதிக்காத வரை). லேட்டஸ்ட் ஹைப்பான ப்ரஜா ராஜ்யம் குறித்து நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த போது, ரஜினிகாந்தை விவாதத்துக்குள் உட்படுத்தியது இன்றியமையாததாக இருந்தது.

சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தது சரியா தவறா என்பது நமக்கு சம்பந்தம் இல்லாத விவாதம். ஆனால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. விஜயகாந்த் இப்பொழுது அடைந்திருக்கும் உயரத்தைவிட அதிகமான உயரத்தை ரஜினிகாந்த் சுலபமாக தொட்டிருக்கலாம். மிக அனுகூலமான சந்தர்ப்பங்களை கையாளத்தெரியாமல் கோட்டைவிட்ட சம்பவங்களின் அழகான உதாரனம் - ரஜினி அரசியலில் நுழையாதது.

என்னடா இது ரஜினிகாந்துக்கு வந்த சோதனை... ஞானியிலிருந்து அஞ்ஞானி வரை நண்டு சிண்டெல்லாம் ரஜினிகாந்தை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்களே என்று நினைக்கிறீர்களா.. அனேகமாக இதே கவலைதான் ரஜினிக்கும் இருக்கக்கூடும். ஆனால் இதே போன்ற விமர்சனங்களை தனக்கு சாதகமாக மாற்றி முன்னேறிக்கொண்டிருப்பவர் விஜயகாந்த்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற அ-புத்திசாலித்தனமான விவாதங்களை நடத்துவது மூடத்தனம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற நிலையில், நடிகர்கள் வருவது கொஞ்சம் நல்லதுதான். அரசியல்வாதிகளின் முக்கியமான கடமைகளுள் ஒன்று, தனது பேரும், செயல்பாடுகளும் மக்களின் கண்களையும், காதுகளையும் சென்றடைய முற்படுவது. நடிகன் என்பவன் ஏற்கனவே மக்களை சென்றடைந்தவன்.

"இருவர்" படத்தின் அழகான காட்சி - கலைஞர் எம்.ஜி.ஆரை மக்கள் சக்திக்கு அறிமுகம் செய்து வைத்தல். இதுவரை பார்க்கவில்லையென்றால், இதைப் பார்க்கவும்.மக்களை ஏற்கனவே சென்றடைந்த ஒருவர், மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவர், மக்களின் விடிவெள்ளியாக உண்மையாகவோ, பொய்யாகவோ நம்பப்படுபவர்... அந்த மக்கள் சக்தியை வோட்டுகளாக ட்ரான்ஸ்பார்ம் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.

பாட்சா படம் முடிந்த கையோடு, "தமிழ் நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று உணர்ச்சிவயப்பட்ட கையோடு அரசியல் நாடகங்கள் ரஜினியை சுற்றி நடக்க ஆரம்பித்தன. அப்பொழுதைய ரஜினி ரசிகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அத்தனை பேரின் நம்பிக்கை - தங்கள் தலைவன் அரசியலுக்கு வர வேண்டும் என்பது. அது நல்லதா கெட்டதா என்பது வேறு விஷயம். பட் he had the power of being acknowledged by a lot of people.

அதை ஒரு அரசியல் ப்ரவேசமாக மாற்றாதது ரஜினியின் தவறு என்பது என் கருத்து. அவர் ஏன் மாற்றவில்லை என்பது குறித்த என் யூகங்கள் இதோ.

ரஜினிகாந்த் அவதூறுக்கு பயந்திருக்கக் கூடும். அரசியல் என்று நுழைந்துவிட்டாலே விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டும். அரசியலுக்குள் நுழையாமலேயே ரஜினிகாந்த் "குசேலன்" சர்சையை எதிர்கொள்ளும் விதத்தைப் பார்த்தாலேயே தெரியும், அவர் தற்கால அரசியல் சமாளிப்புகளை இன்னும் கற்க வில்லை என்று.

ரஜினிகாந்த் பாட்சா படம் வரை சம்பாதித்த செல்வாக்கை செலவு செய்ய பயந்தார். அவருடைய அன்றைய செல்வாக்கில் ஆட்டோக்கள் புடை சூழ அவரது இன்டர்வ்யூ வீடியோ தூர்தர்ஷனை சென்றடைந்த நிகழ்ச்சி வரலாறு. அந்த ப்ரச்சனைக்கு முன்னால் குசேலன் ப்ரச்சனை கால் தூசுக்கு சமம். ஆனால் அவருக்கு இன்று அந்த பலமான செல்வாக்கு இல்லை. குறைந்து போனதற்கு காரணமும் அவரே.

மக்கள் அவரை நம்பத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் அரசியலில் இறங்காதது மக்களை நம்பத் தயாராக இல்லை என்பதையே குறிப்பதாக நான் யூகிக்கிறேன். நான் தவறாக இருக்கக்கூடும். மாற்றுக் கருத்து உடையோர் காமென்டில் இயம்புக.

அரசியலுக்கு வருவதும் வராததும் ரஜினிகாந்தின் சொந்த விருப்பம் தான். ஆனால் ஸ்திரமாக ஒரு முடிவை மக்களுக்கு அவர் அறிவித்திருக்க வேண்டும். "நான் அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன்" என்று சொல்லியிருக்கலாம். ஆனால் திரைப்படங்கள் மூலமாக "எப்பொ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது" என்று கூறி குழப்பியிருக்கவேண்டாம். இப்பொழுது குசேலனில் கூறும்போது "அதெல்லாம் யாரோ ஒரு ரைட்டர், ஏதோ ஒரு படத்துக்கு எழுதிய டையலாக். அதை நான் பேசி நடிச்சேன். அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் பொறுப்பில்லை" என்று சொல்வது போல இருப்பது எனக்கு அவர் மீது உள்ள மரியாதையைக் குறைத்தது. சினிமாவுக்கு வெளியே அரசியலில் கொஞ்சம் ஈடுபாடு காண்பித்துவிட்டு சினிமாவில் இப்படி டையலாக் பேசிவிட்டு பின் "அதற்கு நீங்களாக அர்த்தம் கற்பித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை" என்று கூறுவது அப்பாவி ரசிகர்களின் எண்ணங்களை அவர் எக்ஸ்ப்ளாய்ட் செய்வதைத் தானே காட்டுகிறது. டூ பேட்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது எதற்கும் தயாராக ஆரம்பித்தார். ஏகப்பட்ட விமர்சனங்கள். கண்டிப்புகள். அவதூறுகள். ஆனால் he subjected himself to it, knowingly or unknowingly. எதிர்கொண்டார். அது தான் முக்கியம். இப்பொழுது, பெரியதோர் சக்தியாக உருவாகிவிட்டார்.

சிரஞ்சீவி, ரஜினிக்கு விஜயகாந்த் அளவுக்கு கஷ்டங்கள் கிடையாது. விஜயகாந்தைவிட பன்மடங்கு ரசிகர் கூட்டம் இவர்களுக்கு உண்டு. சிரஞ்சீவி அதைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார். ரஜினிகாந்த் - டூ லேட்.

7 comments:

Shobana said...

True...sounds very true. But I think, he must have thought that he did not have that kind of potential or he must have had this thought...if he entered politics and got to a high position and not able to do any good for the people due to internal politics and the system infrastructure, then he will also be stereotyped as a bad politician. Or maybe he just didn't want to enter politics. Also, if u think about it, I personally feel that we are expecting a lot from this man. Just because he is a superstar in the movies...illa? His political views are his personal choice, but we tried to publicize it and tried to tie the virtual and real worlds together and that is where all this disappointment is coming from.

Keerthi said...

Shobana, we may be expecting too much from him agreed. But, as i said in the post, he should have clearly mentioned his stand. Staying out of politics and then talking politics indirectly in movies, raising expectations, exploiting the curiosity from the fans are something he should have not done.

prabukarthik said...

good one. Yen nambo 'kamal arasiyalukku varuvaara?'nu kekkaradhillai... yenna avar thelivu indha vishayathile...

>>if he entered politics and got to a high position and not able to do any good for the people due to internal politics and the system infrastructure, then he will also be stereotyped as a bad politician.

thats the challenge.

As keerthi says, idhuku thayaar illai na, 'naan arasiyalukku vandhaalum varuven' ngra uncertain matterai vechu atleast exploit pannamalaavadhu irundhirkanum...

Keerthi said...

PK, adhane !!

M Arunachalam said...

Rajini's dialogue in Kuselan is "I have spoken the dialogue written by some body else. Why are you taking it seriously"" - Right?

When you are taking this dialogue seriously, you should also realise that EVEN THIS DIALOGUE HAS BEEN WRITTEN BY SOMEBODY ELSE.

So, kootti kazhichu paarunga, kanakku sariya varum.

Rajini never said he will come to politics or he will not come to politics. Thats why even in the NDTV Awards function for a direct question, he said he doesn't know. Since people like you are expecting him to say either "yes" or "no" as an answer, you may not be in a position to appreciate that there is a thrid option called "I don't know".

Reg. Kamal being clear that he doesn't have any political ambitions, why, even I too don't have any political ambition. Does it mean I have the backing of people for that but I am not for it?

Vas said...

Avaru vantha enna varalaina enna...Vanthu nattukku onnum kizhika porathilai...ennum bangalorela 10 property vangi poduvar...Avar oru super kuzhapavathi..ethileyum oru thirvana mudivu edhuka mudhiyathavar...Ethayavathu olari vaithu matti kozhuvar....let him concentrate on enthiran-the robo and bring his fans back to the theatres at least

Adaengappa !! said...

Even if at all Rajini starts a new party..he could pull crowds to his gala opening,not audiences...:-)

Parkalaam !!