Wednesday, September 03, 2008

எங்க வீட்டுப் பிள்ளையார்

Perumai Vaaindha Pillayar

நேற்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விமரிசையாக என்றால் ?? பூரணக் கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை, அம்மணிக் கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை போன்ற சிறப்பு ஐட்டங்களுடன் யூஷுவல் சாம்பார், ரசம், கறி, கூட்டு எல்லாம் சேர்ந்தால், விமரிசை என்று தானே அர்த்தம்.

பிள்ளையார் முப்பது ரூபாயில் கிடைத்தார். குடை பத்து ரூபாய். எருக்கம்பூ நான்கு ரூபாய். பூக்களின் விலை எக்கச்சக்கம். சாமந்திப்பூ இருபது ரூபாய்க்கு தக்குணூண்டு இருந்தது.

மத்யானம் கிளம்பி கிண்டி வரை சென்று வந்தேன். வழியில் ஒரு பெரிய பிள்ளையார் கூடத் தென்பட வில்லை. சௌந்தரபாண்டியனார் அங்காடியில் (அதாவது பாண்டி பஜாரில்) சயனித்திருக்கும்படி அமைக்கப்ப்பட்டிருந்த சிவன் பார்வதி பொம்மைகள் தான் பெரிய சைஸில் இருந்ததே தவிர, பிள்ளையாரைக் காணோம்.

இப்பொழுதெல்லாம் பிள்ளையார் வாங்குவதற்கு நாற்பது ரூபாய் வேண்டுமென்றால், பிள்ளையாரைப் பிரிவதற்கும் பத்து ரூபாய் வேண்டும்.

மூன்றாம் நாள் பிள்ளையாரை வீட்டிலிருந்து எடுத்து கிணற்றில் போடுவது வழக்கம். சென்னை வீடுகளில் கிணறு இல்லையாதலால், கோயில் குளங்களில் சென்று கரைப்பது வழக்கம். இப்பொழுதெல்லாம் சென்னை கோயில் குளங்களில் நீர் இல்லை என்பதால், தெரு முனையில் அமைந்திருக்கும் மெகா சைஸ் பிள்ளையாருக்கு அடியில் அடைக்கலம் புகுந்து அவருடன் நகரை வலம் வந்து மெரினா கடற்கரையில் ஜலத்தில் கரைக்கப் படுகிறார். இதற்கு, சென்ற வருடம் கரைப்பதற்கு பத்து ரூபாய் என்று ஒரு சிறுவன் வாங்கிக் கொண்டான். ஆனால் இந்த வருடம் மெகா சைஸ் பிள்ளையாரையே அவ்வளவாகக் காணோம். பார்ப்போம்.

No comments: