Friday, September 19, 2008

அடுத்த நிமிட ஆச்சர்யம்

உலகின் மிக முக்கியமான தருணங்கள் அரங்கேறும் வேளையில் ஒரு சனிக்கிழமை உதயமாகிறது. ஏன் ?

CERN என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக நாடுகளின் உதவியோடு, ஒரு Particle Accelerator (தமிழில் : துகள் முடுக்கி) யை வடிவமைத்து செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. இதில் அதி வேகமாக, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் ப்ரோட்டான்களை மோதச் செய்து, அதனின்று வெளிவரும் அனைத்து சமாச்சரங்களையும் ஆராய்ச்சி செய்வதே இந்த சோதனையின் நோக்கம். இதை இவர்கள் செய்யப்போகும் விதத்தை விவரிக்கும் வீடியோ, கீழே.

அவசியம் நேரம் ஒதுக்கிப் பார்க்க வேண்டிய ஒரு சமாச்சாரம், இது. பார்க்கவும்.

"Particle Physics" எனக்கு ஓரளவேனும் புரிந்தது "Angels and Demons" படித்தப்புறம்தான் என்றால், என் அறிவு எந்த அளவில் இருக்கும் என்று புரிந்திருக்கும். CERN நடத்திக்கொண்டிருக்கும் இந்த விளையாட்டிற்கு உலகில் பல்வேறு விதமான எதிர்ப்புகள் (பலமான எதிர்ப்பு என்று ஒன்றும் இல்லை.. ஆனால் ஒரு சில பேர் தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்).

என்ன செய்யப்போகிறார்கள், இதனால் என்ன ப்ரயோஜனம், இதற்கு என்ன செலவு, எதற்கு இத்தனை எதிர்ப்பு... என்று தெரிந்து கொள்ள
அ) முழு தகவல் களஞ்சியம்
ஆ) ஏற்கனவே இது பற்றி அறிந்தவர்கள் கேட்க நினைத்த கேள்விகளுக்கு பதில்கள்


-----ஆனால் இப்பொழுது உலகில், குறைந்தபட்சம் அமெரிக்காவிலும், இந்திய முக்கிய நகரங்களிலும் அதிகம் விவாதிக்கப்படுவது "லீமேன் ப்ரதர்ஸ்", "மெரில் லின்ச்" மற்றும் "ஏஐஜி" ஆகிய நிறுவனங்கள் திவால் ஆனதைப் பற்றித்தான்.

இதனால் போன வாரம் முழவதும் பரபரப்பு. எங்கோ ஒரு மூலையில் சம்பந்தமே இல்லாத ஒரு நிறுவனம் திவால் ஆனது, இங்கே சென்னையில் கொஞ்சம் எதிரொலிக்கத்தான் செய்தது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்களில்.. இன்னும் குறிப்பாக வங்கி மற்றும் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில்.

Trigger Effect அல்லது Ripple Effect என்று சொல்லுவார்களே, அது தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மென்பொருள் நிறுவனங்களில் சில ஆயிரங்களில் மக்கள் வெளியேற்றப்படுவது "காக்காய் உட்கார, பனைமரம் விழுந்த" கதைதான் என்றாலும், இந்த "திவால்" சரிவும் வருங்காலத்தில் கொஞ்சம் பங்கு வகிக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

லீமேன் ப்ரதர்ஸின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள், வேலை தேடுவதால், Outsourcing ஒரு புறம் சொற்பமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு வழியாக "Bank of America - Merril Lynch" வேலைகள் இந்தியாவுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றாலும்.. ஒரு விதமான பதட்டம் ஏற்பட்டிருப்பது உண்மை.

பார்க்கலாம். கமலஹாசன் அன்பே சிவத்தில் சொல்வது போல, "இந்த உலகத்தில் அடுத்த நிமிட ஆச்சர்யங்கள் ஏராளம்".

No comments: