Wednesday, October 01, 2008

நவராத்திரி சுண்டல் டு ப்ளாஸ்டிக் டப்பி !

கல்யாண சாப்பாடு மாதிரிதான், நவராத்திரி சுண்டலும். கற்பனையில் மட்டுமே க்ளாஸியாக இருக்கும். நிஜத்தில், அதற்கு இன்றைய மார்கெட் வேல்யூ குறைச்சல்தான். இருந்தாலும், அம்மாவின் எங்கள் வீட்டு சுண்டல் கொஞ்சம் அபாரமாக இருக்கும்.

எங்கள் வீட்டில், ஒவ்வொரு நாளும் செய்யப்படும் சுண்டல், காராமணி சுண்டல், பயத்தம்பருப்பு சுண்டல், கோஸ் மல்லி, வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல், கருப்பு கொண்டைக்கடலை சுண்டல், காராமணி ஸ்வீட் சுண்டல், பட்டாணி சுண்டல், ஒரு நாளைக்குப் புட்டு என ரேஞ்ச் காட்டுவோம்.

இதில், ஹை ட்ராஃபிக் நாட்களில் வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டலை மாஸ் ப்ரொடக்ஷன் செய்து பொட்டலம் கட்டி வருபவர்களுக்கு விநியோகம் செய்வதுண்டு. தனியாக எனக்கு மட்டும் வெங்காயம் பூண்டு போட்டு கொண்டைக்கடலை சுண்டல் கிடைக்கும்.

எங்கள் வீட்டில் பொதுவாக படிவைத்து எல்லாம் கொலு வைப்பதில்லை. வெறுமன ஷெல்ஃபில் அடுக்கி வைத்து அழகு பார்ப்போம். ஷெல்ஃபில் இருக்கும் ஐடென்டிடி கார்டிலிருந்து சகல விதமான ஷெல்ஃப் ஜீவராசிகளும் இடம்பெயர்ந்து பெட்ரூம் ஷெல்ஃபில் அகதிகள் ஆவார்கள். சன் டி.வி நியூஸில் சொல்வது போல "இயல்பு நிலை கொஞ்சமாக பாதிக்கப்படும்".

முன்பெல்லாம் யாராவது அபூர்வமாக பாட்டுப்பாடுவார்கள். நிச்சயமாக ஒரு "ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி" இருக்கும். குரல் வளம் எல்லாம் சாதாரனம்தான் என்றாலும், அந்தக் காட்சிகள் எல்லாம் இனிமையாக மனதில் பதிந்துள்ளது. ஆனால், அந்த வயதில் எனக்கு கர்னாடக சங்கீதத்தின்மீது ஒரு ஈடுபாடு இல்லாதது என் துரதிர்ஷ்டம். இப்பொழுதெல்லாம் யாரும் பாட்டுப்பாடுவதில்லை.

அதி முக்கியமாக, சென்னைப் பட்டணத்தில் சுண்டலிலிருந்து, பாத்திரம் அல்லது ப்ளாஸ்டிக் டப்பா வைத்துக்கொடுப்பதற்கு சம்பிரதாய மாற்றம் சில வருடங்களாக நிகழ்ந்துள்ளது. பதினைந்து ரூபாயிலிருந்து எழுபது ரூபாய் வரை எவர் சில்வரோ அல்லது ப்ளாஸ்டிக்கிலோ கிச்சன் சமாச்சாரங்களை வாங்கி வைத்து, வீட்டுக்கு வருபவர்களுக்கு வைத்துக் கொடுக்கிறார்கள்.

வைத்துக் கொடுக்கிறார்கள் என்பதை விட எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் கணக்குப் பார்த்துத் தான் டப்பாக்கள் எல்லாம் வாங்கப்படும். உதாரணமாக, ஒரு பத்து டப்பிக்கள் வாங்கினால், பத்து பேருக்கு வைத்துக் கொடுத்துவிட்டு, அந்தப் பத்து பேரின் வீட்டுக்குச் சென்று அவர்களது செலக்ஷனான ஒரு கிச்சன் ஐட்டமை நவராத்திரி பரிசாக கொண்டு வருவார்கள். ஆக மொத்தத்தில், ROI கிடைத்துவிடுகிறது. கிச்சனும் நிறம்பி விடுகிறது.

முன்காலத்தில், ப்ளவுஸ் பிட் வைத்துக் கொடுப்பார்கள். இப்பொழுதும் ஓரளவுக்கு வழக்கத்தில் உண்டு - ரவிக்கைத் துணி ! இந்தப் பெண்களுக்கு என்று ஒரு பண்டிகை வந்தால், ஆண்களை ஒரேடியாக ஓரங்கட்டிவிடுவார்கள். ரவிக்கைத் துணியில், நடுவாந்திரமாக ஒரு ஒரு ரூபாய் காயின் வைத்து ஓரத்தில் வெத்தலைப்பாக்கு வாழைப்பழம் வைத்து குங்குமம் கொடுப்பது, மங்களகரமாக இருக்கும் தான் என்றாலும், அம்மாவின் புடைவைத்தலைப்பைப் பிடித்துக்கொண்டு அம்மாஞ்சியாக நின்று கொண்டிருக்கும் எனக்கு அட்லீஸ்ட் ஒரு கர்சீப்பாவது கொடுத்திருக்க வேண்டாமோ ? நியூஸ் பேப்பரில் மடித்த சுண்டலை மட்டும் எனக்கு "இந்தாடா அம்பி" என்று திணித்துவிடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் அந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மேட்சிங் பிளவுஸ் பிட்டுக்குப் பதிலாக மைக்ரோவேவ் கண்டெயினர் டப்பிக்கள் வழங்கப்படுகிறது.

6 comments:

Yaaro said...

வாழ்த்துக்கள் keerti ..எண்ணத்தின் தீவிரம் வரிகளில் தெரிகிறது ...தொடர்ந்து எழதுங்கள்....நடையும் படங்களும் அழகு

நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.காம்

-கார்த்தி

venkat said...

keerthi...i started reading ur blog accidentally.But now I have become a regular visitor.Your writings are very practical.All the best.

Poetry said...

You know what this sundal & Kitchen xchange vishyam is just not in Chennai, we have a big mela in the silicon valley as well! I just got couple of bowls and a pan :)

Honestly I do enjoy this part of navrathri away from home 'coz we and kids get to dress up. But here we also get little goody bags for young ones too, unlike your sundal pottalam :) the little kids here get pencil, eraser or cute bangles and hairclips!!

Keerthi said...

யாரோ, நன்றி. அவசியம் வாசிக்கிறேன்.

வெங்கட், நன்றி.

போயட்ரி, அடேங்கப்பா. அங்கேயும் நவராத்திரி எக்ஸ்சேஞ் மேளாவா ! குட் டு நோ !!

Anonymous said...

scOjTJ diltiazem sale mxgYRQ cleocin rx CCfARo tegretol ed GNpAdp lunesta free pills mgbjdv kemadrin generic pxHaRA gestanin visa/mastercard/amex/echeck RYZdid zebeta 25mg

Anonymous said...

mDpicv8oNs Slots ztjFha4CZu Online Casino Games HbBGyl6TxV Online Casino Online Poker cQabFNGB7 Turning Stone Casino 7MPV5FIr2A Casino In Las Vegas G3YDWoEAT Casino Niagara Falls skb6VoXrWl Free Casino Games pHA6Y0TFVX Grand Casino Biloxi