Friday, October 10, 2008

டிபேட் செய்யலாம் வாங்க !அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் Presidential and Vice-Presidential Debateகளை எல்லாம் பார்த்து, நம் தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையருக்கு ஒரு யோசனை பிறந்தது. நம்ம ஊரிலும் இப்படி கூட்டம் கூடி வேறு வேறு இடங்களில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், காரி உமிழ்ந்துகொண்டும் இருப்பதால், மக்கள் பரிபூரணமான பொழுதுபோக்கை இழக்க நேரிடுகிறது. ஆகவே, அரசியல்வாதிகளை எல்லாம் கூட்டி ஒரே இடத்தில் இப்படி ஒரு டிபேட் நடத்தினால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார் அவர்.

வாருங்கள் நாமும் சேர்ந்து யோசிப்போம்.

இந்தச் செய்தி உளவுத்துறையின் வழியாக, முதலில் அதிமுகவுக்கும், அப்புறம் திமுகவுக்கும் சென்றடைந்தது. உடனே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பத்திரிக்கை நிருபர்களுக்கு இதை எப்படி கவர் செய்வது என்றே தெரியவில்லை. "மச்சி ! நீ போயஸ் கார்டன் போ ! நான் கோபாலபுரம் போறேன் ! டேய் மாப்ளே ! போற வழில கேப்டனை எழுப்பி நோட்ஸ் ரெடி பண்ண சொல்லு.. " என்று வீடியோ காமிரா சமேதராய் புறப்பட்டனர்.

போயஸ் கார்டன் -

"மேடம் ! டிபேட்டுக்கு நீங்க தயாரா ?"
"மைனாரிட்டி திமுக அரசை எதிர்கொள்ள அதிமுக என்றுமே தயங்கியதில்லை. குடும்ப அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் கருணாநிதி மேடைக்கு வந்து என்னுடன் டிபேட் செய்ய முடிந்தால், நான் வருவது நிச்சயம்."

கோபாலபுரம் -

"சார். ! டிபேட்டுக்கு நீங்க தயாரா ?"
"வாதம் செய்வது எனக்குப் பிடிக்காது. கவிதைப் போட்டி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் கேட்கலாமா என்று செயற்குழு கூடி முடிவு செய்யும்"

"கவிதைப் போட்டியா ? நீங்க அமெரிக்க ஜனாதிபதிக்கான டிபேட் எல்லாம் பார்த்ததில்லையா ?"
"கண்டேன் ! தம்பி ஒபாமாவும், எனதருமை நண்பர் மெக்கெய்னும் தர்கம் செய்ததை என் மகள் கனிமொழி மூலம் அறிந்து கொண்டேன்"

"அப்பொ டிபேட்டுக்கு சரியான தமிழ் வார்த்தை என்னங்கைய்யா ?"
"தர்க்கம் என்று சொல்லலாம். வாய்ச்சண்டை என்றும் சொல்லலாம். பட்டிமன்றம் என்றும் சொல்லலாம்."

------------------------------------------------------


மதியம் நிருபர்கள் சந்திப்பில்

"இது என்னய்யா புதுக் கூத்து ! ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் பட்டிமன்றமாமே.. ஆக்சுவலா இந்த டிபேட் கான்செப்ட்னா என்ன மாப்பு ?"

"சத்யராஜ் வடிவேலு காமெடி ஒன்னு ஞாபகம் இருக்கா ? 'என் குடும்பத்தைப் பத்தி அவன் கேவலமா பேசரதையும், அவன் குடும்பத்தைப் பத்தி நான் கேவலமா பேசரதையும்.. இதை எங்களுக்குள்ள ஒரு பொழுதுபோக்கா வெச்சிருக்கோம் !!'ன்னு சொல்லுவாரே ! அந்த மாதிரிதான் இதுவும்"

"சரி அதெல்லாம் இருக்கட்டும். பட்டிமன்றம்ன்னா ஒரு நடுவர் இருக்கனுமே !! "

-----------------------------------------------
சாலமன் பாப்பையா இல்லம்

"சார் ! அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நடக்க இருக்கிற பட்டி மன்றத்துல நீங்கதான் நடுவர்ன்னு பேச்சு அடிபடுதே ! உண்மையா"

நடு மண்டையிலிருந்து புறப்பட்ட வியர்வையை கர்சீப்பில் துடைத்துக்கொண்டே பாப்பைய்யா பேசினார். "ஏய்யா !! இதென்ன தீபாவளிப் பண்டிகைக்காக சன் டிவி எடுக்கற பட்டிமன்றமா ? அரசியல்ய்யா ! அதெல்லாம் எனக்கு வராதுய்யா !"

"சப்போஸ், உங்களை நடுவர் ஆக்கிட்டாங்கன்னா ?"

"விடமாட்டீயளா ! எதுக்கு தள்ளாத வயசுல கலைஞர் ஐய்யாவ வழக்காடுமேடைக்கு இழுக்கனும்.. அதிமுக சார்பா தா.கு.சுப்ரமணியனையும், திமுக சார்பா நம்ம ராஜாவையும் பேச விட்டா போச்சு. தற்போதைய நிலமையில் தமிழகத்துக்குத் தேவை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களா அல்லது உதவாத உடன்பிறவா நண்பர்களா ? அப்டீன்னு டைட்டில் போட்டா அமெரிக்கா பயகளே, அவிங்க டிபேட்டை விட்டுபுட்டு நம்ம பட்டிமன்றத்தை பாப்பானுகளேய்யா"

-----------------------------------------------
சாயங்காலம் பாமாகாவும், மதிமுகவும் பொறுமுகிறார்கள்.

"வைஸ் பிரெசிடென்ட் டிபேட்டுக்கு முக.ஸ்டாலினும், முக.அழகிரியும் எப்படிய்யா பேச முடியும் ? ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா ?" என்று குழம்புகிறார்கள்.

விஜயகாந்துடன் சூடான பேட்டி.

"தமில்னாட்டுல எனக்கு புடிக்காத வார்த்தை டிபேட்டு ! ஒத்தைக்கு ஒத்தை சவுத்து மேல கால வைச்சு சண்டை போட நான் தயார். என்னையும் டிபேட்டுக்கு கூப்பிடுங்க.. அமெரிக்காவுல மக்கள் தொகை..."

"சார் சார் ! அதெல்லாம் எதுக்கு ! நீங்களும் டிபேட்டில உண்டுன்னு அறிவிச்சிட்டாங்கன்னா, நீங்க என்னென்ன கேள்வி கேப்பீங்க ?"

"என்னை குடிகாரன்னு சொன்னீங்களே ! நான் என்ன பிராண்ட் குடிப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா ? என்ன சைட் டிஷ் சாப்பிட்டேன்னு ஆதாரம் இருக்கான்னு அதிமுகவிடம் கேட்பேன்"

"திமுக கிட்டே ?"

"என்னோட கல்யாண மண்டபத்தை இடிச்சு, இந்து மக்கள் மனதை புண்படுத்திட்டீங்க ! வீ வில் மீட் ! வில் மீட் ! மீட்"

-----------------------------------------------
சோ ராமசாமி - "இந்த வழக்காடு மன்றத்தாலே ஒரு ப்ரயோஜனமும் இருக்கப்போறதில்லே. அமெரிக்கவிலேயே பிரயோஜனம் இல்லே.. இங்க எப்படி இருக்கும் ?"

ரஜினிகாந்த் - "அது.. எப்டி சொல்றதுன்னு தெரியல.. மக்கள் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.... இப்படி சொன்னதால அதிமுக, திமுக யார் மனசாவது புண்பட்டிருந்துச்சுன்னா என்னை மன்னிச்சுடுங்க... கர்னாடக மக்களும் என்னை மன்னிச்சுடுங்க.. நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... சக்தி.. நீங்களும் மன்னிச்சிடுங்க.. எல்லாரும் என்னை மன்னிச்சடுங்க !!"

கமலஹாசன் - "வழக்காடுமன்றம் ! வெல்.. ! அங்கே பேசரவங்க எல்லாம் பொறுப்பா பேசனும். அவங்களுக்கு இருக்கிற சமுதாயக் கோபம்.. அந்த சாடல் எனக்குள்ளேயும் இருக்கு.. ஆனா அதை சொல்லவேண்டிய இடம்னு ஒன்னு இருக்கு.. அது இது இல்லை.. இதுவா இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்லறேன் !"

மன்மோகன் சிங் - "நான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்துவிட்டேன். அவ்வளவுதான். வேறு எது கேட்கவேண்டும் என்றாலும், சோனியாஜியை கேட்கவும்"

-----------------------------------------------
நேரடி ஒளிபரப்பிற்கு சன் டி.வியும் கலைஞர் டி.வியும் போட்டி போடுகின்றன.

-----------------------------------------------
கலைஞர் பதில்கள் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

"என்ன தலைவரே.. என்ன எழுதறீங்க" என்கிறார் அன்பழகன்.
"வழக்காடுமன்றத்துக்கு பதில் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கிறேன் கேளுங்கள். முதல் கேள்விக்கு பதில் 'அதில் சிறிதளவும் உண்மையில்லை'. இரண்டாவது கேள்விக்கு பதில் 'அம்மையாரும் அதே தவறை 1996ல் செய்திருக்கிறார் என்பதை இந்த மேடையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'... மூன்றாம் கேள்விக்கு பதில் 'அவாள் சொல்வதை இவாள் கேட்க அவசியமில்லை'... நான்காம் கேள்விக்கு ..."

"தலைவரே.. எப்படி ? கேள்வி கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா ?"
"இல்லை கண்மனியே ! எந்த கேள்வி கேட்டாலும்.. என் விடை இதுதானடா" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் கலைஞர்.

-----------------------------------------------
நடக்கிற கூத்துக்களையெல்லாம் பார்த்து தேர்தல் ஆணையர் டென்ஷனாகி டிபேட் கிபேட் எதுவும் நம்ம ஊருக்கு லாயக்குப்படாது என்று அறிவித்து, கான்சல் செய்கிறார்.

சுபம்

4 comments:

Rajesh said...

Super. Well Done. Excellent. RFOL

Senthil said...

\\சாயங்காலம் பாமாகாவும், மதிமுகவும் பொறுமுகிறார்கள்.

"வைஸ் பிரெசிடென்ட் டிபேட்டுக்கு முக.ஸ்டாலினும், முக.அழகிரியும் எப்படிய்யா பேச முடியும் ? ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா ?" என்று குழம்புகிறார்கள்.\\

This one takes the cake. ROTFL...

expertdabbler said...

MK, Rajni, VK, Kamal ellam apt!

debate thi mu ka saarba theepori aarumugam pesra madhiri vecha night adults only channel la dhaan nadakkanum

Swarnarekha said...

"தலைவரே.. எப்படி ? கேள்வி கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா ?"
"இல்லை கண்மனியே ! எந்த கேள்வி கேட்டாலும்.. என் விடை இதுதானடா" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் கலைஞர்"

---

hats off 2 this creativity (sorry reality)