Tuesday, October 14, 2008

"சிறந்த இயக்குநருக்கான விருதினை பருத்திவீரன் பட யக்குநர் அமீருக்கு வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய அமீர் கூறியதாவது:

பொதுவாக விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதினைத்தான் கடைசியில் வழங்குகிறார்கள். அப்படி வழங்குவதுதான் கெளரவம் என்பதால் கடைசியில் வழங்குகிறார்கள்.

இது மிகவும் தவறு. ஒரு திரைப்படத்தில் நடிகனின் பங்களிப்பு மிகவும் குறைவு. இயக்குனர்கள் சொல்வதைச் செய்பவன்தான் நடிகன். எனவே இயக்குனர்களுக்குத்தான் விருது வழங்கும் விழாக்களில் முதலிடம் அளிக்க வேண்டும்.

அடுத்தது, சிறந்த நடிகர் என இவர்கள் எந்த அடிப்படையில் ரஜினிக்கும், விஜய்க்கும் தருகிறார்கள்?. அவர்கள் விருதுக்குரிய கதைகளைத் தேர்வு செய்வதே இல்லையே... அவர்களுக்கு எப்படி இந்த விருதுகளை வழங்கலாம்?."

இந்தச் செய்தியை படித்தபோது வேடிக்கையாக இருந்தது. ரஜினி,விஜய் பற்றிய இவரது ஆதங்கம் கொஞ்சம் நியாயமானதே. ஆனால், இயக்குனருக்கு முக்கியத்துவம் என்பது ஏற்க முடியாதது.

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் "கதை-திரைக்கதை-வசனம்- இயக்கம்" என்று நீண்ட நெடிய பங்கு வகிக்கும் ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது நியாயம். ஆனால் இன்றைய தேதிகளில் கதை ஒருவர் எழுத, திரைக்கதை வேறொருவர் எழுத, வசனம் இன்னொருவர் எழுத சம்பந்தமே இல்லாமல் இன்னொருவர் இயக்குகிறார்.

ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்சி என்றால், அதில் ஒவ்வொருவர் பங்கும் முக்கியமானது. நடிகனின் பங்கு மிகக் குறைவு என்று அமீர் சொல்வது இம்மெச்சூர்த்தனம். நாசா விண்கலங்களை வடிவமைத்தவர் எவராக இருந்தாலும் ஓட்டிச் செல்பவர்தான் அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தவர். ஒரு கதாசிரியனின் பளுவை நடிகனின் மீது சுமத்தப்படும்போது நடிகனின் பங்களிப்பு எப்படி குறைவாகக்கூடும் ?

இயக்குனர் என்பவரின் பொறுப்பு பளு வாய்ந்ததுதான் என்றாலும், ஒரு கதாசிரியனின் கதையை, ஒரு திரைக்கதையை இயக்கும் ஒருவராகத்தான் அவர் இருக்கிறார். ப்ளான் செய்து, தேவையான வேலையை வாங்கிக் கொள்வது. It is only a management job. கஷ்டம்தான். ஆனால் நல்லதோர் திரைக்கதை அமைந்துவிட்டால், இயக்குனர் வேலை குறைவுதான்.

ஒரு கதாசிரியராக, திரைக்கதை எழுத்தாளராக அமீர் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்வாரேயானால் அது வரவேற்கத்தக்க கருத்து. இயக்குனர் என்னைப் பொறுத்தவரையில் மூன்றாம்பட்சம்தான்.

திரைப்படம் என்பது கலைவடிவம் என்றால், இயக்குனருக்கு ஆக்கபூர்வமான வேலை ஒன்றும் இல்லாததால் அவர் சுலபமாக பின்னுக்குத் தள்ளப்படலாம்.

Creative வேலைகள் என்றால், முதலில் கதை... பின் திரைக்கதை, இசை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், பாடல் வரிகள், நடனம் என வரிசைப்படுத்தலாம்.

10 comments:

lazy geek said...

sir, i dont think so. i think the director is the captain of the ship.

Ganesh Venkittu said...

நாசா விண்கலங்களை வடிவமைத்தவர் எவராக இருந்தாலும் ஓட்டிச் செல்பவர்தான் அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தவர்.

really??? - if that is the case, are you saying "the guy who dropped the bomb on hiroshima is more important than the minds that went into making the bomb"..

how about missiles? should abdul kalam who designed/oversaw development of them get credit (or) the finger that presses the button to launch it?

Ravi said...

Keerthi, when a movie is a hit, many factors are attributed to it - music, star value, direction etc. but when it comes to flops, the first general comment "Enna da padam edithirukkaan". So its obvious that the director takes the beating. Just because we have started projecting heros as larger than life figures and demi-Gods, we shouldn't value the directors any less - they are definitely like the captain of a ship (ok, ok - as lazy geek put it ;-))

Keerthi said...

Lazy, take away the story and screenplay out of the Director's job. It is just a manager's job. I agree it aint too easy. We could even start bringing in Production Manager's job to the limelight.

All im saying is, the Director's job dont matter to us anymore. May be it is very important for the movie to come through.. But, once out, i think we are directly looking at each other's creative works.

Ganesh Venkittu, I didnt want to mean like that. But I wanted to say even they are equally important and no lesser than others.

Ravi, Days are changing. Im not treating down the value of directors.. Im saying we should not take down the credit of the actors.

Anonymous said...

sorry dude you are absolutely lost

expertdabbler said...

ennai hero va ppottu nee oru padam pannu... we shall revisit this debate later :P

Adiya said...

Hi k,

your comment may fit few directors cap who excel their job in wiring all people and does perfect management job.

but good movie directors has a power in viewing things from top and balance the entire ship. take bhakaraj he did a fair play in all departments and all his movies are run-away success. take T.Rajendarn though his sets are out-dated but i feel he is the first person who cracked IR music and brought new trend then comes deva, rahmman every body. any ways this is what i felt and aamir statements sounds very courages and on track.

P.S>> now a days your blog post missing some good titles?

Thanks
A

Keerthi said...

Anon, Really ?

PK, edutha pochu.. Story vendama ?

Adiya, Old Days right ? The scope of directors have changed over time. And so is the job responsibility. I only think its pretty much the same as other departments.

raj said...

hello keerthi, director is the one with a vision. Ameer is talking about directors like him not KS Ravikumar.
Roja-la Arvindswamy enna pannar? Manirathnam padam pa adhu. ADhu sumar padam dhaangaradhu vera vishayam.
Neenga hero=kamalhassannu yosicha indha ameer paya kamalai vida usathiyannu thonum.

If you take the best movies in the last 3 decades, Udhiri Pookkal is a Mahendran movie(Kadhai yaaru?Mahendran illai). Nobody else can take credit for that vision he had. Hey Ram? It is Kamal, the director's movie.
Thevar Magan? Mahanadhi?Kamal, the ghost-director's movie.

No way actor?director. Rajni>Suresh Krishna, even Vijay>Perarasu but if you are talking about real good movies, then director comes first.

Anonymous said...

story illama kooda nalla padam edukkalam