Tuesday, November 25, 2008

கன மழையும் வெட்டிப்பேச்சும்செம மழை ! ஒரு துளி விநாடியில் குடையை மடக்கிவிட்டு வேணுக்குள் ஏறுவதற்குள் தொப்பமாக நனைந்தாகிவிட்டது. நேற்றிரவிலிருந்து இதோ காலைவரை விடாது பெய்து கொண்டிருக்கின்றது. குளிர்காலம் வேறு... தரையெல்லாம் ஜில்லிட்டிருக்கிறது.

சரி, கொஞ்சம் சூடான செய்தி வாசிக்கலாம் என்று தினமலர் சென்றால் - அடேங்கப்பா ! பாரதிராஜா மூளையை சூடாக்கிவிட்டார்.

ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன் றே தீர்வு' என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: மனித இனம் அழிந்து கொண்டுள்ளது; நீ இறையாண்மையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாய். புலியைக் காப்பாற்ற பாம்பும், கழுதைகளும் தே வையில்லை. ஈ.வெ.ரா., இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார். புலிக்கு இடைஞ்சல் பண் ணாதே. இலங்கைத் தமிழர்கள், தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர்.

(பிரபாகரனின்) பெயரைச் சொல்லாதே என் கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன், வீரமானவன், அவனது பெயரை உச்சரிக்கக் கூடாது என்றால் எனது நாக்கை வெட்டி விடுவேனடா. பிரபாகரன் என்ற பெயரைச் சொல்லக்கூடாது; ஒரு வீரனை வீரன் என்று சொல்லக் கூடாதா... என்னை மிரட்டாதீர்கள்.ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்துப் பேசினால் இறையாண்மை போய்விடும் என்கின்றனர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சகம் எதிர்ப்பு தெரிவிப்பது இறையாண் மைக்கு எதிரானது இல் லையா? முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இன்னும் பேசி கொண்டிருக்கிறாய்; இது என்ன இறையாண்மை?

ராஜிவை கொன்றுவிட்டனர் என்ற ஒரே ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறாயே; ஒரே ஒரு முறை இலங்கையில் என்ன நடக்கிறது என பார்த்துவிட்டு வா. 20 ஆண்டு காலமாக அகதிகளாக இலங்கைத் தமிழர் கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்னால், திடீர் என, "தாயகம் திரும்பிப்போ' என்றால், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

படைபலம், ராணுவ உதவி அனைத்தையும் அனுப்பிவிட்டு, தீர்மானம் நிறைவேற்றுகிறோம்; எம்.பி.,க்களை ராஜினாமா செய்ய வைப்பது உள் ளிட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் வேளையில், அங்கு ஊரே தீப்பிடித்து எரிந்து கொண் டிருப் பது உனக்குத் தெரியாத? உளவுத்துறை இல் லையா? இது வலுப் பெற்றால் தமிழகம் பாகுபட்டுவிடும். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
மற்ற இயக்குனர்கள் பேசியதன் விபரம் - இங்கே

என்ன ஒரு மடத்தனம் ! அனேகமாக பாரதிராஜா கைது செய்யப்படலாம். ஆனால் கைதாவதால் மட்டும் இந்த மடக் கருத்துக்கள் மாறப்போவதில்லை. எனக்கென்னவோ, தான் கைதாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அமீரும் சீமானும் விரைவில் ஜாமீனில் வந்தது அவருக்குள் ஒரு யோசனையை மூட்டியிருக்கக்கூடும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றது பெருங்குற்றம். ஒரு தனி மனிதனை அவர்கள் கொல்லவில்லை. இந்த நாட்டை ஒரு விதமான வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றுகொண்டிருந்த ஒரு தலைவனை அவர்கள் கொன்றார்கள். நமது நாட்டின் கடைசி மெஜாரிட்டி அரசு அவருடையது.. அத்தகைய வலுவான ஒரு தலைவரின் absenceதான் இன்று வரை கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்திரமான எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளின் ஒப்புதலுக்காக மசோதாக்கள் அல்லாடுகின்றன. அனைத்து இந்தியர்களுக்கும் பரிச்சயமான ஒரு தேசியத் தலைவரை, ஒரு தீவிரவாதக் கும்பல் அந்த நாட்டு மண்ணிலேயே கொன்றது - சாதாரண செயலா ?

நமது நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்ட ராஜீவ் காந்தியின் படுகொலையை மறக்கச்சொல்கிறாரா பாரதிராஜா ? கிட்டத்தட்ட "ஆய்த எழுத்து" பட செல்வநாயகம் மாதிரியேதான் பேசுகிறார் !

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான்

இதற்கு ஒரு கரோலரி சொல்லவேண்டும் எனக்கு ஆசைதான். நான் என்ன பாரதிராஜாவா, அப்படிப் பேசுவதற்கு.

3 comments:

mekie said...

Well said, Keerthi! He is indeed taking linguistic and ethnic passions to the extreme. What good can come out of whipping up such mindless words?

SayMee said...

It is all publicity and media stunt. The real people who help the refugees to rebuild thier lifes are doing it silently without mouthing such ferocius reactions.

Keerthi said...

Mekie, It cannot casue any good for sure. But it can certainly kindle the already emotionally affected people. !!

SayMee, well said. !