Sunday, December 28, 2008

Couch Potato

Remote Life

விஞ்ஞான உத்தி
அஞ்ஞான புத்தி

உட்கார்ந்த இடத்திலிருந்தே
உலகமுழுதும் யாரோடும் கதையளக்கலாம், பேசலாம், சண்டை போடலாம்
சிடி போட்டு பாடல் கேட்கலாம், திருட்டு விசிடி படங்கள் பார்க்கலாம்
இயற்கையை எக்காளம் செய்து அந்த ரூமின் சீதோஷ்னத்தையே மாற்றலாம்
தொலைக்காட்சியில் கோலங்கள் ஓடவிட்டு அந்த அபஸ்வர ம்யூசிக்கை ம்யூட் செய்யலாம்.
அனைத்தும் செய்யலாம்...
ஆனால் உபகரணங்கள் எல்லாம் மெத்தையில் இருக்கின்றன..

யாரேனும் என் நாற்காலிக்கு எடுத்துவந்தால் தேவலை..

1 comment:

Rizzvi Nizar said...

Great, last verse hilarious... keep up!