Sunday, May 31, 2009

ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ்

இன்று காலை, வெகு நாளாக எதிர்பார்த்திருந்த "Angels & Demons" படம் பார்த்தேன். ஏமாற்றம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் படம் பார்த்தேன். நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. இந்தப் படம் Dan Brown எழுதிய Angels & Demons என்ற புஸ்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். இந்தப் புத்தகத்தைப் படித்திறாத மூன்று நண்பர்களும், இரண்டு தடவை படித்திருந்த நானும் சேர்ந்து பார்த்தபோது.. அவர்களுக்கு கதை புரியவில்லை. எனக்கு திருப்தியளிக்கவில்லை.

பொதுவாகவே, ஏற்கனவே வெளிவந்து வெற்றியடைந்த புத்தகத்தை வைத்துப் படம் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம். அதிலும் அந்தப் புத்தகத்தின் ரசிகர்களை, படத்தின் ரசிகர்களாக அடைவது இன்னும் கஷ்டம். காரணம், ஒரு வாசகன் ஒரு கதையை வாசிக்கும் போதே அதை மனதில் ஒரு படமாக இயக்கிவிடுகிறான். அவனுக்குப் பிடித்தமான நடிகர்களை வைத்து நடிக்கச்செய்கிறான். சொந்தக் கற்பனையில் அந்தப் படத்தைப் பார்க்கிறான். அந்த கற்பனையின் வீரியத்தை எந்த இயக்குனராலும் மிஞ்ச முடியாது.

அந்த வகையில் நானறிந்த வரையில் புத்தகமாகவும் வந்து வெற்றியடைந்து படமாகவும் சோபித்த சில படங்களில் முக்கியமானது காட் ஃபாதர். அதன் வெற்றிக்குப் பின்னால் எத்தனையோ பேர் இருந்தாலும் அந்தப் புத்தகத்தை எழுதிய மரியா புசோவே திரைக்கதையும் எழுதி வெற்றிக்கு வழி வகுத்தார். (Harry Potter கூட புத்தகங்கள் படங்களைவிட விரும்பப்படுவதும் இதனால்தான்).

Angels & Demonsக்கு வருவோம். படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், பல இடங்களில் புத்தகத்தைவிட்டு அதிகமாக வேறுபட்டு இருக்கிறது. படத்தின் நீளத்தைக் குறைக்கவோ என்னவோ, CERNல் அதிகம் கதையளக்காமல், யாருடைய flashbackஐயும் நீட்டி முழக்கி சொல்லாமல் துரித வேகத்தில் படத்தை நகர்த்தியிருக்கின்றனர்.

நாவலை வேகமாக அங்கங்கே பக்கங்களை வேகமாகப் புரட்டி படித்து முடிப்பது போல இருந்தது. ஆனால், மூலக்கதையில் எங்கும் கோட்டைவிடாமல் சுறுசுறுப்பாக ஓட்டிச்சென்றது நிம்மதியாக இருந்தது. ஆனால் வழி நெடுக ராபெர்ட் லாங்க்டன் கதாபாத்திரம் (Tom Hanks) சொல்லிக்கொண்டே வரும் factsகளை கவனிக்கமுடிவதில்லை. கதை படிக்காதவர்கள் "Illuminati" குறித்த டையலாகுகளை புரிந்துகொள்ள முடியவில்லை. படம் அடுத்தவருக்கு எப்படிப் புரிகிறது என்பது போன்ற வெட்டிக் கவலைகள் ஏதும் எனக்கு இல்லை. இருந்தாலும் புத்தகத்தை அப்படியே நம் கண்முன் காட்டப்போகிறார்கள் - அந்த அனுபவத்தை ரசிக்கப்போகிறோம் என்று (தவறுதலாக) நினைத்த எனக்கு சிறிது ஏமாற்றம். அவ்வளவே. புத்தகத்தில், விட்டோரா என்கிற ஹீரோயின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் ஆழமானது.. அதற்கு அர்தமில்லாமல் செய்தது பெருங்குற்றம். இதை மாதிரி சில பல deviation from the book.. ஜீரணிக்க முடியாததாக இருந்தது.

விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. வேட்டிக்கனை இன்னும் அழகாகவும் டீடெயிலாகவும் காண்பித்திருக்கலாம். டி.வி. பெட்டியில் தெரியும் க்ளாரிட்டிதான் வேட்டிக்கனைக் காண்பிக்கும்போது தெரிகிறது. மத்தபடி எல்லாம் சாதாரன இங்கிலீஷ் படத்திற்குண்டான டெக்னாலஜிக்கள்தான்.

எப்படியாக இருந்தாலும், இந்த இரண்டரை மணி நேரத்தில் இப்படித்தான் எடுக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால், குழப்பமான "The Prestige" புஸ்தகத்தை திரைக்கதையாக எழுதி சிறந்த படமாக ஒருவரால் இயக்க முடியும் என்றால், "Angels & Demons" could have been a lot better than what I saw today.

7 comments:

ஆதவா said...

நல்ல விமர்சனம். இன்று பார்க்கலாம் என்றிருந்தேன். நண்பர்கள் சேரவில்லை!!

அனுஜன்யா said...

Good post. Had read the book. Yet to see the movie.

Even Da Vinci sort of suffered a similar fate.

Like God Father, The Day of the Jackal was another good movie made from a good book.

Tamil Font problem. Pl excuse.

Anujanya

Anonymous said...

ஒன்று புரியவில்லை. வில்லனின் திட்டத்தின் நோக்கம் என்ன? அழிவால் என்ன சாதிக்கப் போகிறான்? தானும் அழியத்தானே போகிறான். கதாநாயகன் கோட்டை விட்டிருந்தால்,
அழிவு நிச்சயம்தானே! படம் விறு விறுப்பாக இருந்தது!

Keerthi said...

ஆதவா, பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. எப்படிப் பிடித்திருக்கிறது என்று.

அனுஜன்யா, Yeah.. Day of Jackal was good too.. but, people liked the book.. didnt they ?

Anon, புத்தகம் படியுங்கள். ஆக்சுவலாக வில்லன் போப்பின் மகன்.. தன்னை ஒரு பாதுகாவலனாக காண்பித்துக்கொள்ளவே இவ்வாறு செய்துள்ளான். கதானாயகன் கோட்டைவிட முடியாது.. விட்டிருந்தாலும், நம்ம வில்லன் எப்படியாவது வேட்டிக்கனைக் காப்பாற்றி இருப்பார். இதுவே திட்டம்.

Ravi said...

Keerthi, I think books like Da Vinci.. and Angel & ... are difficult to be made in movies primarily because they are in-built with a lot of theories and historical quotes. They would make interesting reads yes! but not sure if the whole idea can be translated into a movie.

Shobana said...

I think the movie couldn't make much justice to the book, simply because I think the director and producer may have wanted to avoid yet another controversial subject line. So by omitting the Carmalageo's flashback, the plot doesn't really have that much of an impact.

But I liked this movie better than Da Vinci Code, because, it was fast moving. The visuals moved too fast to even look at them.

Keerthi said...

Ravi, you are right.. So many facts.. Easily read from a book, than seen in a movie.

Shobana, he he.. true, and thats a wise decision. And yes, its much better than Da Vinci.. a trim screenplay. But i wish the camera could have worked better, atleast giving a visual treat.